ஏடிஎம்மில் கொள்ளை.. 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் !

மகாராஷ்டிரா வில் துப்பாக்கி முனையில் ஏடிஎம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்ற கொள்ளை யர்களில் 6 பேரை 48 மணி நேரத்தில் போலீஸார் தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். 

ஏடிஎம்மில் கொள்ளை.. 48 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் !
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3.12 கோடி பணம் பறிமுதல் செய்யப் பட்டது. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் செக்மேட் பிரைவேட் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 
வீட்டுக்கு பட்ஜெட்டுக்குள் உலோக அலங்காரம் செய்ய !
பல்வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே டீன் ஹாத் நாக்காவில் இந்நிறுவன த்தின் கிளை அலுவலகம் செயல்படுகிறது.

இந்த அலுவலக த்தில் இருந்து கடந்த 28-ம் தேதி ஏடிஎம் மையங் களுக்கு பணம் நிரப்பு வதற்காக வேனில் ரூ.10 கோடியை ஊழியர்கள் ஏற்றிக் கொண்டி ருந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடன் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, சுமார் ரூ.9.16 கோடியை கொள்ளை யடித்துச் சென்றது.

மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்த தானே போலீஸார் நேற்று 6 கொள்ளை யர்களை கைது செய்தனர். 

அத்துடன் அவர்களிடம் இருந்து ரூ.3.12 கோடி ரொக்கம், கண்காணிப்பு கேமராக்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், 3 கார்கள் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில டிஜிபி பிரவீண் திக்சித் நேற்று நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நிறுவனத்தில் இருந்த ரகசிய கேமராக் களையும் கொள்ளை யர்கள் கொள்ளை யடித்துச் சென்றதால், 

இவ்வழக் கில் துப்பு துலங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் உளவுத் துறை மற்றும் தொழில்நுட்ப தகவல் களை அடிப்படை யாக வைத்து, 

கொள்ளை நடந்த 48 மணி நேரத் துக்குள் போலீஸார் கொள்ளை யர்களை கைது செய்துள்ளனர். விரைவில் தலைமறை வான பிற குற்ற வாளிகளும் கைது செய்யப்படுவர் என்றார்.
உங்கள் வீட்டுக்கு வாங்கும் வீட்டுக் கடனை அடைப்பது எப்படி?
சிக்கியது எப்படி?

நாசிக் அருகே உள்ள வாடிவரே என்ற பகுதியில் கொள்ளையர்கள் சிலர் ஒன்று கூடி கொள்ளை யடித்தப் பணத்தை தங்களுக் குள் பங்கு பிரித்துக் கொண்டி ருந்தனர். 

அப்போது போலீஸார் அவர் களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைதான வர்களில் ஆகாஷ் சவன் என்கிற சின்கியா இந்நிறுவன த்தின் முன்னாள் ஊழியர்.
கடந்த பிப்ரவரியில் பணியில் இருந்து விலகியதும், தனக்கு பதிலாக அமோல் அருண் கர்லே என்பவரை ஆகாஷ் நிறுவனத் தில் சேர்த்து விட்டார்.

அவரது உதவியுடன் தான் ஆகாஷ் உள் ளிட்டோர் இந்த கொள்ளையில் ஈடு பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings