ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே ஆதார் அட்டை இல்லாத வாடிக்கை யாளர்களுக்கு சமையல் கேஸ் மானியம் வழங்கப்பட வில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தரப்பில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி
மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கா விட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி யுள்ளன.
எனவே, வாடிக்கை யாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை பெறுவதை வலியுறுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வழிகாட்டுதலின் படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 87% பேர் ஆதார் அட்டை வைத்துள்ளனர்:
தமிழகத்தில் மட்டும் 7.1 கோடி மக்களில் 6.30 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளனர். சென்னையை பொருத்த வரை 70% மக்கள் ஆதார் அடையாள பெற்றுள்ளனர்