சாதித்து காட்டிய சவுதிமன்னர் சல்மான் !

சாவு பயத்தில் கலங்கி போய் உள்ள அமெரிக்கா! உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த முதல் நாடு அமெரிக்கா, 
சாதித்து காட்டிய சவுதிமன்னர் சல்மான் !

அமெரிக்காவுக்கும் அடுத்த இடத்தில் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடு ரஷ்யா, ரஷ்யா ஆப்கானிஸ்தானை பிடித்த போது 


ரஷ்யாவை நிலைகுலைய ஒசாமா பின்லேடன் அவர்களை வைத்து ஆப்கானிஸ்தானை மீட்டது அமெரிக்கா, 

பின்னர் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆட்டிப்படைத்ததால் அமெரிக்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் யுத்தம் தொடங்கியது.

அதேப்போல் சோவியத் ரஷ்யன் தகர்க்கப்பட்டு 6 முஸ்லிம் நாடுகள் தனித்தனியாக உருவானது.

மேற்கண்ட சம்பவங்களையும், ரஷ்யா கம்யூனிஸ நாடு என்பதால் கம்யூனிஸ்ட் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கை என்பதையும் கூறி 

ரஷ்யாவோடு முஸ்லிம் நாடுகள் நெருங்காதவாறு செல்வ செழிப்புள்ள முஸ்லிம் நாடுகளை தன் வசம் வைத்துக்கொண்டது அமெரிக்கா,

முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா ஒருபுறம் நேச நாடுகளாக இருந்து கொண்டாலும் முஸ்லிம்களின் எதிரி நாடான இஸ்ரேலும் அமெரிக்காவின் கள்ள குழந்தையாகும்.


மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது போல் அமெரிக்கா முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இரட்டை வேடத்தையே போட்டு வருகிறது.

இதேநிலையில் தான் இத்தனை ஆண்டுகள் ஓடியது.

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு 

இந்த 10 மாதத்தில் அவர் சவூதி அரேபியாவை மட்டும் முன்னேற்றவில்லை, உலக அரசியலையே புரட்டிபோட்டு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கதி கலங்க வைத்து விட்டார். 

நீண்டகால வரலாற்றை மாற்றி எழுதும் விதமாக சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவுக்கு முதல் பாடத்தை கற்று கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா சவூதி அரேபியாவையும், ரஷ்யாவையும் ஒன்றினையாதவாறு ரஷ்யாவுக்கு கூடுதலாக 6 மாதம் பொருளாதார தடையை நீட்டித்துள்ளது.


இருப்பினும் சவூதி அரேபியா ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாகவே இருக்கிறது. சவூதி அரேபியாவை பின் தொடர்ந்து பல்வேறு அரபு நாடுகளும் ரஷ்யாவுடன் கூட்டணி வைக்க தொடங்கி விட்டது.

இஸ்ரேலை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாலஸ்தீன், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, சவூதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை ரஷ்யா நேச நாடுகளாக ஒன்றிணைத்து கொண்டிருக்கிறது 

அல்லது இந்த ஒன்றிணைப்பை சவூதி அரேபியா மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கதி கலங்கியுள்ளன.

எது எப்படியோ 60 ஆண்டுகால வெறியை தீர்க்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

இதனால் பதறி போன அமெரிக்கா முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் பல்வேறு சலுகைகளை வாரி வாரி கொட்டுகிறது.

ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது, பாலஸ்தீன் கொடியை ஐநாவில் ஏற்றியது, 


முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடான இந்தியாவில் முஹம்மது அக்லாக் படுகொலைக்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது,

இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம் பெருகி விட்டதாக குற்றம் சுமத்தியது, அமெரிக்காவில் பக்ரீத்துக்கு விடுமுறை அறிவித்தது,

வாட்ச் பையன் அஹமதுவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து உபசரித்தது, அமெரிக்காவில் ஹிஜாபுக்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒபாமா பேசியது, 

அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் பன்றி கறிக்கு தடை ஹலாலான உணவுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இப்படி தொடர்ச்சியாக அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறது, 

எது எப்படியோ 10 மாத ஆட்சியில் மன்னர் சல்மான் முஸ்லிம்களுக்கும், உலக முஸ்லிம் சமுதாயத்திற்கும் நிறையவே செய்துள்ளார். 


மன்னர் சல்மான் அவர்களுக்காக நாம் துஆ செய்ய நன்றி கடன் பட்டுள்ளோம். மன்னர் சல்மான் அவர்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் உயரிய நிலையிலேயே வைத்திருப்பானாக....
Tags:
Privacy and cookie settings