மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி ஏற்கனவே வகித்த இலாக்காக்கள் மாற்றப்பட்டன. அதன்படி புதிய இலாக்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
19 புதிய அமைச்சர்கள் பதவி யேற்றுள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு துறை பிரகாஷ் ஜவடேகருக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை வெங்கய்யா நாயுடுவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சகத்திலும், ஸ்மிருதி இரானிக்கு ஜவுளித்துறையும் ஒதுக்கப் பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக விஜய் கோயல் நியமிக்கப் பட்டுள்ளார்.
அனில் மாதவ் தவே சுற்றுச்சூழல் துறைக்கும், சதானந்த கவுடா புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது..
விமான போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஜெயந்த் சின்கா நியமிக்கப் பட்டுள்ளார். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக அக்பர் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அனுப்பிரியா பட்டேலுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. ஹன்ஸ்ராஜ் கங்காராமுக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.