ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளி யின் ரத்த சம்பந் தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா,
அவர்க ளுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள் ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக் கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒரு வருக்கு பொருந்தாமல்,
மற்றொரு நோயாளிக்கு பொருந்து மேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொது வாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத் திலுள்ள ஆன்டி பாடிஸ் தான் காரணம்.
ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்து வதற்கு முன்னால் ‘ப்ளாஸ்மா பெரிஸிஸ்’ என்ற முறையில், ஆன்டி பாடிகளை எடுத்து விட்டுத் தான் பொருத்துவார்கள்.
அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.