வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !

நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட்ஸ் என அனைத்து நட்ஸ்களிலுமே ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
இப்போது இக்கட்டுரை யில் நாம் தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

வால்நட்ஸில் கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்களுடன், 

வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற வைகளும் அடங்கியுள்ளன.

அதோடு வால்நட்ஸில் ஏராளமான அளவில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்கள் சிறிய அளவிலான வால்நட்ஸில் நிறைந்துள்ளது என்றால் பாருங்களேன்.
வெயிலைச் சமாளிக்க உங்களுக்காகவே சில டிப்ஸ் 
அப்படி யெனில் அந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

சரி, இப்போது ஒருவர் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்ன வென்று பார்ப்போம்.
பசி வராமல் தடுக்க

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், ஸ்நாக்ஸாக வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

வால்நட்ஸில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதுடன், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
அல்சைமர் நோயை தடுக்க

வால்நட்ஸில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கிய த்தைப் பராமரிக்க உதவும். 

இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை களான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.

கெட்ட கொலஸ்ட்ரால்  குறைய

வால்நட்ஸில் இருக்கும் ஃபேட்டி அமிலங்கள், புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கனிமச் சத்துக்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

நல்ல கொழுப்பு அதிகரிக்க

ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், மோனோ - அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்புக் களைக் குறைத்து, இதய ஆரோக்கி யத்தை மேம்படுத்தும்.
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி? 
எனவே இதயம் ஆரோக்கி யமாக இருக்க வேண்டு மானால், தினமும் வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் குறைய
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
வால்நட்ஸில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்கள்.

சர்க்கரையை கட்டுபடுத்த

சர்க்கரை நோயாளிகள் வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ -அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சர்க்கரை நோயை கட்டுப் பாட்டுடன் வைக்க உதவும்.

எலும்புகளின் ஆரோக்கியம்
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
வால்நட்ஸில் இருக்கும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் அல்லது ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், உடலால் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க உதவும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மெட்டபாலிசம் தூண்ட

கனிமச் சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். எனவே தொப்பையைக் குறைக்க நினைப் போருக்கு இது மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்.

தூக்கம் வர

வால்நட்ஸில் உள்ள மெலடோனின் என்னும் பொருள், தூக்கத்தைத் தூண்டும். எனவே தூக்க மின்மை பிரச்சனையால் அவஸ்தைப் படுபவர்கள்,

வால்நட்ஸை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

தலைமுடி உதிர்வை குறைக்க 
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடி யின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை களை சந்திப்பவர்கள், வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

விந்தணு அதிகரிக்க

வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகிய வற்றை மேம்படுத்து கிறது. 

ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள் !
சரும சுருக்கம் மறைய

வால்நட்ஸில் வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதை தினமும் சாப்பிடும் போது, அது சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுத்து, ப்ரீ ராடிக்கல்க ளிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

புற்றுநோயை தடுக்கும்
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் !
ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. 

ஆகவே புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட வேண்டு மானால், தினமும் 5 வால்நட்ஸை தவறாமல் சாப்பிடுங்கள்.

வாழ்நாள் அதிகரிக்கும்

வாழ்நாளின் அளவை நீட்டிக்க வேண்டுமா? அப்படியெனில் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதுவே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயத்தைக் குறைத்து, வாழ்நாளை நீட்டிக்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால்
சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !
கர்ப்பிணிகள் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு, உணவுகளால் ஏற்படும் அழற்சியை யும் குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வால்நட்ஸ் குழந்தையின் குடல் வளர்ச்சிக்கு உதவுவதா கவும் ஆய்வுகள் கூறுகின்றன.
Tags:
Privacy and cookie settings