அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மாரடைப்பு ஏற்பட்ட சிறைக் காவலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கை விலங்கிடப் பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர்.
அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த ஒரே ஒரு காவலர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்துள்ளார். இதைப் பார்த்த கைதிகள் உதவி கோரி சத்தம் போட்டனர். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லை.
இதனிடையே, கைதி களில் ஒருவர் கதவை உடைத்தார். இதையடுத்து 8 கைதிகளும் வெளியே வந்து நிலைகுலைந்த காவலரை பரிசோதித்தபோது அவருக்கு நாடித் துடிப்பு இல்லாததை உணர்ந்தனர்.
பின்னர் கைதிகள் உதவி கோரி கதவைத் தட்டியவாறு மீண்டும் கூச்சல் போட்டனர். இந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அதிகாரிகள் அங்கு ஓடி வந்து, கைதிகளை அறையில் வைத்து பூட்டி விட்டு
அவசர மருத்துவ சேவைப் பிரிவை அழைத்தனர். இதனிடையே, மூச்சடைத்துப் போன பாதுகாவலரின் உயிரைக் காப்பாற்ற முதலுதவி செய்தனர்.
அதற்குள் விரைந்து வந்த மருத்துவர்கள் அதிர்வுக் கரு வியைக் கொண்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதைய டுத்து காவலரின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
சிறைக் கைதிகள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து உதவியதால் காவலரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று கேப்டன் மார்க் அர்னெட் தெரிவித்துள்ளார்.
ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக கைதி கள் கதவை உடைத்துக் கொண்டு வெளியேறினர். இந்த சம்பவத் துக்குப் பிறகு அந்த சிறையின் கதவுகள் உடைக்க முடியாதபடி பலப்படுத்தப்பட்டன.