ரஜினியின் கபாலி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியின் தொழில் வளத்தை அதிகரிக்கவும், புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்கவும்
ரஜினியின் ஒத்துழைப்பு வேண்டும் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அழைப்பு விடுத்து இருந்தார்.
சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும், சமூக பணி செய்பவர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கபாலி டிக்கெட் வழங்கப்படும் என்று கலெக்டர் அறிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் தங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் காட்சி டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று கபாலி படத்தின் புதுச்சேரி வினியோகஸ்தர் லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி. செல்வகுமார் அறிவித்துள்ளார்.
அவர் இன்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை சந்தித்தார். அப்போது இந்த தகவலை அவரிடம் தெரிவித்தார்.
திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.