சுவாதியும், ராம்குமாரும் பேஸ்புக் நண்பர்களா?

சுவாதி கொலைக்கு காரணம், ராம்குமாருடன் ஏற்பட்ட பேஸ்புக் கூடா நட்புதானா என்ற கேள்விக்கு சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பதிலளித்தார். 
சுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சென்னையில் காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமிஷனர் ராஜேந்திரன். 

அப்போது, கொலையாளி ராம்குமார் என்பதை உறுதி செய்த கமிஷனர், அதற்கான ஆதாரங்களை இப்போது கூற முடியாது என்றார்.

கொலையாளி 3 மாதங்கள் முன்புதான் சென்னைக்கு வந்ததாகவும், சுவாதி வீட்டுக்கு பக்கத்து தெருவிலுள்ள மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடி வந்ததாகவும் குறிப்பிட்ட கமிஷனர், 

சுவாதி வேலைக்கு செல்லும் இடங்களில் அவ்வப்போது அவரை பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து ராம்குமார், தொல்லை செய்து வந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும் கமிஷனர் தெரிவித்தார். கமிஷனர் தனது அரை மணி நேர பேட்டியில் பெரும்பாலான விஷயங்களை வெளியிடாமல் தவிர்க்க முயன்றதை பார்க்க முடிந்தது.

பேட்டியின்போது, நிருபர்கள் மடக்கி மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நழுவியபடியேதான் பதிலளித்தார் கமிஷனர் ராஜேந்திரன். அதில் ஒரு கேள்வி, சுவாதியின் பேஸ்புக் பற்றி வந்தது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமாருக்கும், சுவாதிக்கும் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டதாகவும், அந்த பழக்கம் அதிகரித்ததால்தான் ராம்குமார், சென்னைக்கு வந்து, 

சுவாதி வீட்டருகே தங்கியதாகவும் கூறப்படுகிறதே என்பது நிருபர் கேள்வி. இதற்கு பதிலளித்த கமிஷனர், கொலைக்கான காரணம் குறித்து இப்போது எதையும் கூற முடியாது என்றதோடு, 
'விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்று மீடியாக்களை கேட்டுக்கொண்டார். தனது அரை மணி நேர பேட்டியில் அதிகம் முறை கமிஷனர் உச்சரித்த வார்த்தையும், இதுதான்.

பேஸ்புக்கில் பல்வேறு நண்பர்களுடன் சுவாதிக்கு பழக்கம் இருந்ததாகவும், அதில் ஒருவர்தான் ராம்குமார் எனவும், ஏற்கனவே செய்திகள் கசிந்தன. ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்ப்பது பிடிக்காமல் தான் ராம்குமார் நட்பை சுவாதி துண்டிக்க முயன்றதாகவும், 

எனவே அவர் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பேஸ்புக் நட்பை, கமிஷனர், உறுதிப்படுத்தவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.
Tags:
Privacy and cookie settings