நடிகை த்ரிஷாவுக்கு வந்த பயங்கர கோபம் !

நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ மாணவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை த்ரிஷா கோரியுள்ளார். 
இளைஞர் ஒருவர் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் திங்கள்கிழமை பரவியது. ஒருவர் வீச, மற்றொருவர் படம் பிடித்துள்ளார். 

புகாரின் பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயை துன்புறுத்தினர் என்பதும், 

இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. விலங்குகள் நல தன்னார்வலர்கள் அந்த நாயை தற்போது பராமரித்து வருகிறார்கள். 

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்: "நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. 

இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன்." த்ரிஷா ஏற்கெனவே தெருநாய்கள் மீது பரிவு காட்டி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings