வீட்டில் இருந்த படி பெண்கள் கைத்தொழில் செய்ய பயனுள்ள டிப்ஸ் !

வயதான பெண்கள் வீட்டில் இருந்த படியே சுயமாக சம்பாதிப் பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் பல சான்றிதழ் படிப்புகள் உள்ளன. ஆர்வத்தை மூலதன மாக கொண்டு, 


இவற்றைப் படித்தால் அவர்களது தனிமை துரத்தி யடிக்கப் பட்டு, வருமானத் துக்கும் வழி கிடைக்கும்.

பெண்கள் அதிகம் விரும்பும் படிப்பு பியூட்டீஷியன் கோர்ஸ் (அழகுக் கலை). இதை இளம் வயது பெண்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 

வயதான பெண்களும் அழகுக் கலை நிபுணராக உலா வரமுடியும். பிளஸ் 2 படித்திரு ந்தால் போதும்.

படிப்புக் காலம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை. மெஹந்தி வைப்பது முதல் சிகை அலங்காரம் வரை ப்யூட்டீஷியன் கோர்ஸில் தனித் தனியாக வகுப்புகள் நடத்து கின்றனர்.

வீட்டில் இருந்தபடி திருமணப் பெண்களுக்கு அலங்காரம் செய்யலாம். அருகே உள்ள பெண்கள், சிறுமி களுக்கு முக அழகு செய்து வருவாய் ஈட்டலாம்.

கொஞ்சம் வசதி இருந்தால் தனியாக பியூட்டி பார்லர் நடத்தலாம். வயதான பெண்களுக்கு ஏற்ற தொழில்.

அழகுக் கலைப் படிப்பில் ஆர்வம் இல்லா தவர்கள் ஓவியம் வரைதல், கிளாஸ் பெயின்ட், தஞ்சாவூர் ஆர்ட் உள்ளிட்ட பட்டயப் படிப்புகளை படிக்கலாம். 

குறைந்த கால சான்றிதழ் படிப்புகள் படிப்பதன் மூலம் வீட்டில் இருந்தபடி இயற்கை ஓவியங்கள், தத்ரூபமான ஓவியங்கள் வரைதல், கிளாஸ் பெயின்ட் மூலம் அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் என்று வருமானம் ஈட்டலாம். 

வித்தியாச மான ஓவியங் களுக்கு மக்களிடம் எப்போதும் வரவேற்பு உள்ளதால், இது போன்ற தொழில் சார்ந்தவர் களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தோட்டக் கலை சார்ந்த படிப்பு களிலும் பெண்கள் அதிக அக்கறை காட்டி வருகின் றனர். வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பது சம்பந்த மாக படிப்புகள் உள்ளன. 

தோட்டக் கலைத் துறை மூலம் இப்பயிற்சி இலவசமாக வழங்கப் படுகிறது. மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் நம் வீட்டுக்குத் தேவை யான காய்கறி, பழங்களை நாமே பயிரிட்டு, உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள லாம். 

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்துக் கொடுப் பதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். நர்சரி கார்டன், நர்சரி விற்பனை மையம் ஆகிய வையும் அமைக்கலாம்.

திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் விழா, அலுவலக நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சி களில் பிரதானமாக இருப்பது பொக்கே.

பல வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் பொக்கே அமைப்பது சம்பந்த மான சான்றிதழ் வகுப்புகள் உள்ளன.

இதில் சேர்ந்து பொக்கே செய்யக் கற்றுக் கொண்டால், வீட்டில் இருந்த படியே தொலைபேசி மூலமாக ஆர்டர் எடுத்து, கைநிறைய சம்பாதிக் கலாம்.

ஃபேஷன் டெக்னாலஜி கோர்ஸ் மூலம் ஆடை அலங்கார நிபுணராக முடியும். பேர்ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைன், கோத்தாரி அகாடமி உள்ளிட்ட கல்வி நிறுவன ங்களில் இதை கற்றுக் கொடுக் கின்றனர். 

ஆடையின் தேவை எப்போதும் இருந்து கொண்டே இருப்பதால், இத்தொழிலு க்கு மிகுந்த வரவேற்பு உண்டு. வித்தியாச மான ஆடை வடிவங் களை உருவாக்கி, விற்பனை செய்வதன் மூலம் தனிப் பெருமை யுடன், 

சுய தொழிலில் முத்திரை பதிக்க முடியும். வீடுகளில் இருந்தபடி ‘ஹோம் மேட்’ சாக்லேட் தயாரித்து விற்பதும் வருமானம் ஈட்டுவதற் கேற்ற தொழில் ஆகும்.
Tags:
Privacy and cookie settings