பெண்கள் ஆண்களை விட வேகமாக வளர்கின்றனர் !

அன்னை ஆயிஷா...... அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது மிக பெரிய தொடராக போகும் அத்தனை விவரங்கள் அடங்கியது அவர்களின் வாழ்க்கை வரலாறு .

இது அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு.. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருமை தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

சிறு வயதிலேயே சிறந்த அறிவாளியாகவும், நல்ல நினைவாற்றல் உள்ள வராகவும் இருந்தார்கள் ..

அன்னையவர்களின் திருமணம் நடந்த போது அவர்களின் வயது '6' திருமணம் என்றால் என்ன வென்று தெரியாத விளையாட்டு பருவம்..வயதின் காரணமாக அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.

அவர்களின் '9'வயதில் தான் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும்,

மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது .அந்த அறைக்கு கதவு துணியால் மூடப்பட்டிருந்தது.

அந்த அறையில் உலக வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பர பொருள்கள் கிடையாது. மறுமை வாழ்வுக்கான பொருள்கள் மட்டுமே இருந்தது .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகுந்த இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.

யார் இல்லை என்று வந்தாலும் தன்னிடம் இருப்பதை. தனக்கு இல்லை என்றாலும் கூட கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.அடுத்தவர்களின் துன்பத்தை கண்டால் கண்ணீர் சிந்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவிகளுக்கு இல்லாத பெருமை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உண்டு.அவர்கள் மட்டும் தான் கன்னி பெண்ணாக மணம் முடிக்கப் பட்டவர்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்த காரணத்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு அவர்களுக்கு தோழமையோடு கூடிய நல்ல புரிந்துணர்வு இருந்தது .

இவர்களின் வயது காரணமாக இவர்களின் வேடிக்கை பேச்சுக்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் புன்னைகையோடு ஈடு கொடுப்பது உண்டு..

கணவரோடு மிகுந்த அன்போடு ,அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய பாக்கியசாலியாக இருந்தார்கள்.
அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்கம் நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக.ஆமீன்.
Tags:
Privacy and cookie settings