டாக்டர்களின் கிறுக்கல்... ஏன் இந்த அலட்சியம்?

‘பல ஆண்டு காலமாக டாக்டர்கள் மேல முன் வைக்குற குற்றச்சாட்டுதான் இது. இருந்தும் இன்னமும் பல டாக்டர்கள் திருந்தாம கிறுக்கியே எழுதுறாங்க. இதுல உள்நோக்கம்னு சொல்ற மாதிரி எதுவும் கிடையாது. 
டாக்டர்களின் கிறுக்கல்... ஏன் இந்த அலட்சியம்?
முன்னவெல்லாம் கிளினிக்குக் குள்ளேயே கம்பவுண்டர் இருப்பார். டாக்டருடைய கையெழுத்து கம்பவுண்டருக்கு புரிஞ்சா போதும்னு எழுதுவாங்க.

இன்னைக்கு எந்தெந்த ஊர்ல இருந்தோ ட்ரீட்மென்டுக்கு வராங்க. இங்க கொடுக்கிற மருந்துச்சீட்டை அவங்க ஊர்ல கொண்டு போய் கொடுக்கும் போது புரியுறதில்லை. 

பார்மஸி படிக்காத சாதாரண ஆளுங்க தான் இன்னைக்கு மெடிக்கல்ஸ்ல மருந்து கொடுக்கிறாங்க. 

இந்தக் கையெழுத்தை தப்பா படிச்சுட்டு மருந்து கொடுக்கிறதுக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கு. மருந்துச் சீட்டுங்கிறது டாக்டருடைய டைரி கிடையாது, அவருக்கு மட்டும் புரிஞ்சா போதுங்கிறதுக்கு.

இந்தியாவுல எந்த மூலையில் கொண்டு போய் கொடுத்தாலும் மருந்து வாங்குற அளவுக்கு மாத்திரைகள் மற்றும் டோஸ் அளவு தெளிவா எழுதப் பட்டிருந்தா தான் அது ப்ரிஸ்க்ரிப்ஷன்.

சில டாக்டர்கள் இதுக்கு விதிவிலக்கா இருக்கோம். கேப்பிட்டல் லெட்டர்ஸ்ல எழுதுறோம். புரியுற மாதிரி மருந்து எழுதிக் கொடுக்கிறது ஒவ்வொரு டாக்டருக்கும் கட்டாயக் கடமைன்னே சொல்லலாம். 

பெரிய மருத்துவ மனைகளில் பிரின்ட் அவுட் எடுத்தே கொடுத்துடறாங்க...’ கிறுக்கலான கையெழுத்தை எவ்வாறு புரிந்து கொண்டு மருந்து வழங்குகிறீர்கள்? 

கையெழுத்து புரியாத நிலையில் என்ன செய்வீர்கள்? மருந்தக உரிமையாளர் பாலசுப்ரமணியத்தை கேட்டோம்.
‘உள்ளூர்ல தெரிஞ்ச டாக்டர் எந்த மருந்தை எப்படி எழுதுவார்ங்கிறது நல்லாவே பரிச்சயமாகி யிருக்கும். 

அதனால அந்தக் கையெழுத்தை புரிஞ்சுகிட்டு சரியான மருந்து கொடுக்கிறதுல எந்தப் பிரச்னையும் இருக்காது. 

வெளியூர்ல இருந்து வர்ற ப்ரிஸ்க்ரிப்ஷனை எங்களால படிச்சு புரிஞ்சுக்க முடியாது. ப்ரிஸ்க்ரிப்ஷன்லயே ஹாஸ்பிடல் நம்பரோ, டாக்டரோட மொபைல் நம்பரோ இருக்கும். 

கையெழுத்து புரியலைங்கிற நிலைமையில அந்த நம்பருக்கு கால் பண்ணி எங்க சந்தேகத்தை தெளிவு பண்ணிட்டுத் தான் மருந்து கொடுப்போம்.

இந்தத் துறையில நல்ல அனுபவம் இருக்கும் போது எந்தெந்த பிரச்னைகளுக்கு என்னென்ன மருந்து கொடுப்பாங்கங்கிறது தெரிஞ்சு ப்ரிஸ்க்ரிப்ஷனை படிக்கும் போது புரிய வாய்ப்பிருக்கு. 
ப்ரிஸ்க்ரிப்ஷன்ல இருக்கிற ஒரு மாத்திரையை படிச்சுப் புரிஞ்சுக் கிட்டாக் கூட அதுக்கான combination மாத்திரைகள் எதுன்னு தெரிஞ்சு கொடுத்திடலாம்’’ என்கிறார்.

இது போன்ற கையெழுத்துகளை புரிந்து கொண்டு மருந்துகள் வழங்குவதற்கென பார்மஸி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பயிற்சிகள் அளிக்கப் படுகிறதா? 

அன்னை வேளாங்கண்ணி பார்மஸி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் செந்தில் குமாரிடம் கேட்டோம்...

பார்மஸி படிப்பில் ஒவ்வொரு மருந்தோட தேவைகள், அதோட combinationல எந்தெந்த மருந்துகளைக் கொடுக்கலாம்னு முழுமையா கத்துக் கொடுக்கப்படுது. 

அதன் மூலமா மருந்து மாத்திரைகளோட பெயர்களெல்லாம் நல்லா பரிச்சயமாகி யிருக்கும். 

அதனால பார்மஸி படிச்சிட்டு வர்றவங்களால மருந்து மாத்திக் கொடுக்கிற தவறு பெரும்பாலும் நடக்காது. ஒரு மாத்திரையோட மருத்துவப் பெயரை drug moleculeனு சொல்லுவோம்.

உதாரணமா, காய்ச்சல் மாத்திரைக்கு drug molecule பெயர் paracetamol. ஆனா, இதே மாத்திரையை பல கம்பெனிகள் வெவ்வேற பிராண்ட் நேம்ல விற்பாங்க. 
ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு பிராண்ட் விற்பனையாகும். டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன்ல அவங்களோட பகுதியில இருக்கிற பிராண்ட்களை தான் எழுதுவாங்க.

அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை வெளியூர் மருந்துக்கடைகள்ல குடுக்குறப்ப அவங்களுக்கு அது புரியாது. 

வெளிநாடுகளை எடுத்துக்கிட்டா அங்க உள்ள டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன் ஷீட்ல ஒரு மாத்திரையோட drug molecule பெயரைத்தான் எழுதுவாங்க. அது பொதுப் பெயரா இருக்கும். 

அதே மாதிரியான நடைமுறை நம்ம நாட்டுலயும் வரணும் என்றார். பல்வேறு விதமான உடல் பிரச்னைகளுக்கு தினசரி பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை உண்ணும் நோயாளிகள் பலர் இருக்கிறார்கள். 

அவர்கள் கையெழுத்து புரியாத ப்ரிஸ்க்ரிப்ஷனை வைத்து மருந்தை மாற்றிச் சாப்பிடுவதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் இருக்கின்றன. கையெழுத்தின் ஊடாக உயிரைக் கிறுக்கி அலட்சியப் படுத்த வேண்டாமே. 
இந்தியாவின் எந்த மூலையில் கொண்டு போய் கொடுத்தாலும் மருந்து வாங்க வசதியாக, மாத்திரைகள் மற்றும் டோஸ் அளவு தெளிவாக எழுதப்பட்டி ருந்தால்தான் அது ப்ரிஸ்க்ரிப்ஷன்.... கி.ச.திலீபன் - நன்றி குங்குமம்
Privacy and cookie settings