பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ என்று வித்தியாசமானப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தன்ஷிகா.
தற்போது ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங் கியுள்ள நிலையில் அதில் நடித்ததைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்.
‘கபாலி’ படத்தில் முடியெல் லாம் வெட்டி வித்தியா சமாக இருக்கி றீர்களே?
‘கபாலி’யில் லேடி டானாக நடித்திரு க்கிறேன். இதற்காக முடியை வெட்ட வைத்து எனது கெட்டப்பை மாற்றியது இரஞ்சித் சார் தான்.
‘காலக் கூத்து’ படத்தில் நடித்துக் கொண்டி ருந்த போது இரஞ்சித் சார் என்னை போன் செய்து அழைத்தார். அவரைப் போய் பார்த்த போது இந்த கதாபாத்தி ரத்தைப் பற்றி கூறினார்.
மிகச் சிறந்த கதா பாத்திரம். ஆனால் அதற்காக முடியை வெட்ட வேண்டும் என்றார். முடியை வெட்ட வேண்டும் என்றதும் முதலில் அதிர்ச்சி யாக இருந்தது. பிறகு என்னை சமாதானப் படுத்திக் கொண்டு சம்மதித்தேன்.
4 நாட்கள் கழித்து தான் அவர் சொன்ன அந்த கதா பாத்திரம், ‘கபாலி’ படத்துக் கானது என்று தெரிய வந்தது. ரஜினியுடன் நடிக்கப் போகிறோம் என்று தெரிந்ததும் நான் அடைந்த சந்தோஷ த்துக்கு அளவே இல்லை.
என்னிடம் நிறையப் பேர் “எதற்காக முடியை வெட்டி னாய்? விக் வைத்திருக் கலாமே” என்று கேட்டார்கள். அவர் களிடம் “விக் வைத்து நடித்தால் அது எப்படி யும் காட்டிக் கொடுத்து விடும்.
‘கபாலி’யில் என் கதா பாத்திரம் படத்தில் மிகவும் முக்கிய மானது. அந்த பாத் திரத்துக்கா கத்தான் முடியை இழந்தேன்” என்றேன். படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கே அதன் முக்கிய த்துவம் தெரியும்.
முடியை வெட்டிக் கொண்டதால் வேறு படங்களின் வாய்ப்பை இழந்தீர்களா?
ரஜினி சாரோடு நடிக்க வேண்டும் என்பது பலருக்கும் உள்ள ஆசை. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த நிலையில் அதை எப்படியாவது தக்கவைத் துக் கொள்ள விரும்பினேன்.
இடையில் நிறைய படங்கள் வந்தன. ஆனால் அந்தப் படங்களின் மூலமாக கிடைக்கும் பெயரை விட இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.
ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற என் ஆசை ‘கபாலி’ படம் மூலம் நிறை வேறியுள்ளது. முதல் 2 நாட்கள் ரஜினி சாருடன் நடிப்பது பதற்றமாக இருந்தது.
இதைக் கவனித்த அவர், “பயப் படாதீங்க.. நார்மலா இருங்க” என்று என்னை சமாதானப் படுத்தினார்.
அதன் பிறகு இரஞ்சித் சாரும் ஒளிப்பதிவாளர் முரளி சாரும் என் பதற்ற த்தைப் போக்குவ தற்கு தகுந்தாற் போல் சில காட்சி களைப் படமாக்கி னார்கள். இதனால் நான் இயல்பாக நடிக்கத் தொடங் கினேன்.
‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ என்று நீங்கள் வித்தியாச மான படங்க ளாகத் தேர்வு செய்கிறீ ர்களே?
அது போன்ற படங்கள் தான் எனக்கு மிகவும் உத்வேக மளித்தது. பலரும் குறிப்பிட்டு பேசும் படங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்தி ருக்கிறேன் என்பதில் சந்தோஷம்.
நான் இது வரை நடித்த படங்களின் வரிசையில் ‘கபாலி’ படமும் மக்களி டையே தாக்கத்தை ஏற்படுத்தும்.
எத்தனை படங்களில் நடித்தோம் என்பதை விட எத்தனை நல்ல படங்களில் நடித்தோம் என்பது தான் முக்கியம் என்று நினைக் கிறேன். அப்போது தான் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும்.
ரஜினியுடன் நடிக்கப் போகிறேன் என்றதும் வீட்டில் என்ன சொன்னார்கள்?
மிகவும் சந்தோஷப் பட்டார்கள். நான் எப்போ துமே உறவினர் களை விட்டு கொஞ்சம் விலகி இருப் பேன். நிகழ்ச் சிகளில் பார்த்துக் கொண்டால் மட்டும் பேசுவேன். அவ்வளவு தான்.
அது ஏன் என்று எனக்கே தெரியாது. நான் அதிக மாக பேசாத உறவி னர்கள் கூட ‘கபாலி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத் தவுடன் போனில் வாழ்த்து தெரிவி த்தார்கள்.
சமுத்திரக் கனி இயக்கத்தில் நடித்து வரும் ‘கிட்ணா’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
‘கிட்ணா’ படத்துக் காக போட்டோ ஷுட் எல்லாம் செய் தோம். அதற்கிடையில் தான் ‘கபாலி’ பட வாய்ப்பு வந்தது. இதுபற்றி கேள்விப் பட்டதும், “கண்டிப்பாக அதைச் செய் யுங்கள்.
உங்கள் திரை யுலக வாழ்க்கை க்கு இது முக்கிய மான படம்” என்று சமுத்திரக் கனி சார் என்னை அனுப்பி வைத்தார்.
அவருடைய பெருந் தன்மைக்கு மிகவும் நன்றி. அவரை என்னால் மறக்க முடியாது. ’கிட்ணா’ படமும் சிறந்த படம். இது 3 கால கட்டங் களில் நடக்கும் கதையை மைய மாகக் கொண்டது.