தண்ணியில வீடுகளைப் பார்த்து இருக்கீங்களா?

தண்ணியில போற கப்பலைப் பார்த்து இருப்பீங்க. ஆனா, வீடுகளைப் பார்த்து இருக்கீங்களா? (சென்னை வெள்ளம் வேற பாஸ்!). துபாய்ல தண்ணியில மிதக்கிற வீடுகள் கட்டி இருக்காங்களாம்.
வீட்டின் முதல் தளம், இரண்டாம் தளம் மட்டும்தான் தண்ணிக்கு மேலே. குளியலறை, படுக்கை இரண்டுமே தண்ணீருக்கு அடியிலாம். அதாவது நாம் தூங்கும் போது,

கண் விழித்துப் பார்த்தால் மீன், சுறா எல்லாம் தெரியும். சமையலறை முதல் தளத்திலும் மினி பார், மினி சாப்பாட்டு அறை எல்லாமே இரண்டாம் தளமாம். 
பார்க்க ஒரு பெரிய சைஸ் படகு மாதிரித் தெரிந்தாலும் இது வீடு தான் என சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள் இதன் நிறுவனர்கள்.
கடந்த அக்டோபர் மாதம் இதை விற்க ஆரம்பித்தார்கள். இது வரை பல வீடுகள் விற்றுள்ளதாம் பாஸ். விலை 9 கோடி தானாம்.

நம் ஊர்ல மழை பேஞ்சா, நம்ம வீடும் தண்ணிக்குள்ள தான்னு, உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது, புரியுது!
Tags:
Privacy and cookie settings