சவுதியில் தாக்குதல்... பாகிஸ்தானியர் கைது !

சவுதி அரேபியாவில் மதினா மசூதி உட்பட அடுத்தடுத்து 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 12 பாகிஸ்தானியர்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4-ம் தேதி அதிகாலை சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். 

இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை. போலீஸ் விசா ரணையில் அந்த நபர் பாகிஸ் தானைச் சேர்ந்த அப்துல் குல்சார் கான் என்பது தெரியவந்தது.

அதேநாளில் முஸ்லிம்களின் புனிதத் தலமான மெதினா மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

அதேநாளில் குவாதிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் தற் கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதைத் தொடர்ந்து 2 குண்டுகள் வெடித்தன.

ஒரே நாளில் நடந்த 3 தாக்கு தல்களுக்கும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் மூன்று தாக்குதல்கள் தொடர்பாக 12 பாகிஸ்தானியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சவுதியை சேர்ந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings