சமூக சேவையை விளம்பரமாக்க கூடாது... நந்திதா !

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்ட ணியில் உருவாகி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்தி ருக்கிறார் நந்திதா. எதிர் பார்க்காத வேடம். 
ஆனா, பலரும் நந்திதாவுக்கு இதில் நெகடிவ் ரோல்னு எழுதுறாங்க. அப்படி யெல்லாம் இல்லை. இப்போ வரைக்கும் நாங்க யாரும் எங்கேயும் இது தான் எங்க கதாபாத்திரம்னு சொன்ன தில்லை. 

இது வரை இது போல ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைச்சதில்லை. இப்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும்! என்று புன்னகை க்கிறார் நந்திதா. தொடர்ந்து அவரோடு உரையாடி யதிலிருந்து..

சமூக சேவையை விளம்பரமாக்க கூடாது... நந்திதா !
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத் துக்கு முன் ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற் கான வேலைகள் நடந்து வரு கிறதே?

அடுத்த மாதம் ரிலீஸா கிறது. ‘உள் குத்து’ படத்தோட இயக்குநர் கார்த்திக் ராஜூ நல்ல நண்பர். 

படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதும் எனக்கு என்ன வேடம்னு கேட்டேன். 

நாகர் கோவில் பகுதியில் துணிக் கடையில் வேலை பார்க்கிற பெண் வேடம்னு சொன் னாங்க. 

‘அட்டகத்தி’ படத்துக்கு பிறகு நானும், தினேஷும் சேர்ந்து நடித்த படம். ரசிகர்கள் வரவேற் பாங்கன்னு நினைக் கிறேன்.

செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா ன்னு இரண்டு சிறந்த கலைஞர் களோடு ‘நெஞ்சம் மறப்ப தில்லை’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
தமிழ்ல எட்டு படங்களுக்கு மேல நடிச்சாச்சு. செல்வராகவன் சார் நடிகர்கள் கிட்ட வேலை வாங்கற விதமே வித்தியாசமா இருந்தது. 

படத்தில் நடிக்கத் தொடங்க றதுக்கு முன்னாடி எல்லாரும் பயமுறுத் தினாங்க. ஆனா, செல்வராகவன் படத்துல கத்துக் கிட்ட விஷயங்கள் எக்கச்சக்கம். 

முதல் நாள் ஷூட்ல இருந்து கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் ஏதாவது ஒண்ணு கத்துக் கிட்டே இருந்தே ன்னும் சொல்லலாம். 

அதேமாதிரி தான் எஸ்.ஜே. சூர்யாவும். அடிப்படை யில் அவரும் ஒரு இயக்குநர். ஆனா, இந்தப்பட த்துல நடிகர் என்ற பரிமா ணத்தை மட்டுமே வெளிக் காட்டினார்.

நான், எஸ்.ஜே .சூர்யா, ரெஜினா மூணு பேரோட காம்பி னேஷன் காட்சிகள் ரொம்பவே பேசப்படும். விரைவில் டீஸர் வரப்போகுது. அதுக்காகத் தான் காத்திரு க்கேன்.

‘அட்டக்கத்தி’, ‘எதிர் நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா’ படங்கள்ல இருந்து இப்போ நடிக்குற ‘நெஞ்சம் மறப்ப தில்லை’ வரைக்கும் இரண்டு ஹீரோயின் கதைகளை அதிகம் தேர்வு செய்து வர்றீங்களே? என்ன காரணம்?
நான் நடித்த இரண்டு நாயகிகள் சப்ஜெக்ட் படங்கள் எல்லாமே ஹிட் ஆகியி ருக்கு. அது என்னோட அதிர்ஷ்டம் னும் சொல் லலாம். படத் துல இன்னொரு ஹீரோயின் இருக் காங்களேன்னு 

நான் எப்பவுமே கவலைப் பட்ட தில்லை. என்னோட ரோல் என்ன சொல்ல வருது. அதை எப்படி கவனமா செய்யறதுங் கிறது மட்டும் தான் என்னோட இலக்கு.

தெலுங்கு படங்கள் லயும் தடம் பதிச்சிட் டீங்களே?

கடந்த 2 வருஷத் துக்கு மேல தெலுங்குல வாய்ப்புங்க தேடி வர ஆரம்பிச்சது. சரியான நேரத்துல இறங்கு வோம்னு இருந்தேன். நல்ல கதா பாத்திரம் கிடைத் தது. அதான் உடனே ஓ.கே சொல் லிட்டேன்.

ஆனந்த் இயக்க த்துல நிகில் சித்தார்த் ஹீரோ. நல்ல கதை. அப்போ இது சரி யான நேரம் தானே. இனிமே.. தமிழ், தெலுங் குன்னு ரெண்டு மொழி கள்ல யும் கவனம் செலுத்த வேண்டியது தான்.
விலங்குகள் பாதுகாப்புக் காக குரல் கொடுப்பது, குழந்தை களை தத்தெடுப்பது என்று நாய கிகள் சிலர் சமூக ஆர்வலர் களாக இருப்பது ஒருவித விளம்பரம்னு விமர் சனம் வருதே?

நானும் பள்ளி குழந்தை களை படிக்க வைப்பதில் தொடங்கி உடல் உறுப்புகள் தானம் வரைக்கும் பல விதமான சமூக சேவை விஷயங் களில் ஈடுபட்டு வர்றேன். 

ஆனா, அதை ஒருபோதும் விளம்ப ரத்துக்கு பயன் படுத்த விரும்பிய தில்லை. அது தேவையில் லைன்னும் நினைக் கிறேன். இந்த விஷய த்தில் மற்ற யாரும் எப்படி வேண்டுமா னாலும் இருக்கலாம். 

அது அவரவர் விருப்பம். அதை நான் விமர்சனம் செய்ய முடியாது. எனக்கு எப்படித் தோணுதோ அதைத் தான் நான் செய்ய வேண்டும். அப்படித் தான் செய்து ட்டும் இருக்கேன்.
Tags:
Privacy and cookie settings