சுவாதியை கொன்றது ராம்குமாரா? அடையாள அணிவகுப்பு !

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி (24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் 
செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸார் கைது செய்ய முயன்ற போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற் கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுகிறது. 

போலீஸார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து 

ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். உடல்நிலை குணமானதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் எஸ்.பி.ராம்ராஜ், புழல் சிறைக்கு சென்று ராம்குமாரை சந்தித்துப் பேசினார்.

ராம்குமாருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர் நான்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, ‘‘ராம்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கே தவறானது.

எனவே, ராம்குமாருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்’’ என்றார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய பிளாட்பாரத் தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை நேரில் பார்த் துள்ளனர்.

ராம்குமார் தான் கொலை யாளியா என்பதை கொலையை நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டுவதற்காக, 

புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை நேரில் பார்த்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings