நம் அரசியல்வாதிகள் பாணியில் இலவசம்.... ஹிலரி !

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலரி கிளிண்டன், இலவச அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளார். தமிழக அரசியல்வாதிகள்தான் இலவசங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் 
என்று சொல்லும் அளவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் மீது அள்ளித் தெளித்த இலவச அறிவிப்புகள் ரொம்ப பேமஸ். 

விலையில்லா ஆடு விலையில்லா மாடு விலையில்லா லேப்டாப் விலையில்லா டிவி என சகட்டுமேனிக்கு மக்கள் மீது இலசவங்களைத் திணித்த பெருமைக்குரியவர்கள் நமது அரசியல்வாதிகள்.

இதைப் பார்த்து இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் கூட இநத்தகைய விலையில்லாத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 

இப்போது அமெரிககாவிலும் இந்த இலவச வியாதி பரவியுள்ளது. அமெரிக்க அதிபர் தேரத்லில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவர் ஒரு இலவச வாக்குறுதியை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வைஃபை. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று ஹிலரி குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளார் என்பது நினைவிக்கலாம். 

ஹிலரியின் இந்த இலவச அறிவிப்பு அமெரிக்க மக்களைக் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings