'2ஓ' படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது பாஸ்போர்ட்டைப் பறி கொடுத்த சம்பவம் அண்மையில் நடந்திருக்கிறது. பிஸியாக நடித்து வரும் எமி கிடைத்த சிறு இடைவெளியில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு விசிட் அடித்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள இபிஸா தீவுக்கு சென்ற எமி அங்கே தனது பாஸ்போர்ட், செல்போன் போன்றவைகளை கைப்பையுடன் சேர்த்து திருட்டுக் கொடுத்திருக்கிறார்.
இதனால் தொடர்ந்து அவரால் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இபிஸா தீவிலிருந்து ஸ்பெயின் தூதரகம் சென்ற எமி அங்கே திருட்டு தொடர்பான புகார் அளித்தார்.
மேலும் தன்னுடைய மெயிலில் இருந்து பாஸ்போர்ட் தொடர்பான விவரங்களைக் கொடுத்து தொடர்ந்து பயணம் செய்ய அனுமதி வாங்கினார்.
இது தொடர்பாக இங்கிலாந்து தூதரகத்திலும் எமி புகார் கொடுக்க, இங்கிலாந்து தூதரகம் ஸ்பெயின் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு எமி ஜாக்சன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை எளிமையான முறையில் செய்து கொடுத்திருக்கிறது.
வெளி நாடுகளில் பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள் பட்டியலில் வித்யுலேகா, சோனு சூட்டைத் தொடர்ந்து எமி ஜாக்சனும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.