விக்ரம் பிரபு தயாரித்து நடிக்க இருக்கும் புதுப்படத்துக்கு 'நெருப்புடா' என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விக்ரம் பிரபு,
தற்போது ஃபர்ஸ்ட் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி யுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'நெருப்புடா' படத்தைத் தயாரிக்கிறார்.
'கபாலி' படத்தின் பாடல் நெருப்புடா வரியையே படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். 'நெருப்புடா' படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இப்படத்தை இயக்குகிறார்.
நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'ஆடுகளம்' நரேன், பொன் வண்ணன், மதுசூதன் ராப், நாகிநீடு ஆகியோரும் இப்படத் தில் முக்கியக் கதாபாத்திரங் களில் நடிக்க உள்ளனர்.
ஆர்.டி.ராஜே சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரோகேஷ் பாடல்களை எழுதுகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
தீயணைப்பு வீரர் கதாபாத்தி ரத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு, ரஜினியின் தீவிர ரசிகராக நடிப்பது குறிப்பிடத் தக்கது. விரைவில் படப்படிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.