சென்னையில் இருசக்கர வாகனத்தில், வழிப்பறி, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க காண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனத்தில், வழிப்பறி, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காணலாம்.
எனவே கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) பொருத்துமாறு குடியிருப்பு நிர்வாகிகளுக்கு சென்னை போலீஸார் கோரிக்கை வைத்துள்ளனர்
இது குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர், "குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் கொள்ளை குற்றங்களை கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துவதன் மூலம் தடுக்க முடியும்.
மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் குற்றம் எண்ணிக்கை குறையும் இதன் மூலம் சட்ட ஒழுங்கும் நிலை நாட்டப்படும்" என்றார்.
குடியிருப்பு சங்க நிர்வாகிகளுக்கு அறிவுரை:
போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி சுந்தரமூர்த்தி விநாயகர் தெருவில் வசிக்கும் 220 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ரூ.2.50 லட்சம் செலவில் 24 கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) தெருவின் பல்வேறு பகுதிகளில் பொருத்தியுள்ளார்.
இதுகுறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரி கூறும்போது, தெருக்களில் 500 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் வெளியாட்களின் நடமாட்டத்தை காண்காணிக்க முடியும் என்றார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ளூர் காவல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் குடியிருப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.
மேலும் துரைப்பாக்கத்தில் நடந்த கலந்துரையாடலில் சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
இதே போன்ற கலந்துரையாடல்கள் கே.கே. நகர் மற்றும் சென்னையின் இதர பகுதிகளில் இந்த வாரம் நடத்த, சென்னை காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.