விழிகளை இழந்தாலும், விடா முயற்சியால் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்று மாணவர்களை திறம்பட அரவணைத்துச் செல்வதுடன் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை யும் அதிகரித்து வருகிறார்
சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் எஸ்.எஸ்.பாண்டி யராஜன்(51).
மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.
நெடிய சட்டப் போராட்டத்தின் மூலமாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று, தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
மடிக்கணினியில் பேசும் மென்பொருளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவர், சிறப்பு கரும்பலகையில் பாடங்களை எழுதுகிறார். மாணவர் களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியும் அளித்து வருகிறார்.
இதுகுறித்து தலைமை ஆசி ரியர் பாண்டியராஜன் கூறிய தாவது: பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தபோது, திடீரென பார்வைத் திறன் குறையத் தொடங்கியது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை.
4 ஆண்டுகளில் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது. பின்னர் சராசரி மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.
ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட். முடித்த நான், 1994-ம் ஆண்டு தருமபுரியில் உள்ள நெருப்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 9 மாதங்கள் பணி புரிந்த பின்னர், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன்.
அங்கு 1994-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை பணி புரிந்தேன். பின்னர் 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை, மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்தேன்.
அப்போது தலைமை ஆசிரியர் பணிக்கான தகுதி இருந்தது. ஆனால், பணி உயர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பார்வை யற்ற மாற்றுத்திறனாளி ஆட்சியராக இருக்கும்போது தலைமை ஆசி ரியர் பணியை சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறி,
நான் ஆசிரிய ராக பணியில் இருந்த போது மேற்கொண்ட அனைத்து உத்தி களையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினேன். அதன் பிறகே எனக்கு தலைமையாசிரியர் பணி கிடைத்தது.
2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
அதற்கு முன் 60 சதவீதம் அல்லது 70 சதவீதமாக இருந்த தேர்ச்சி 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் ஆக அதிகரித்தது.
பின்னர் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.
கடின உழைப்பு, தன்னம் பிக்கை, நேர்மறை எண்ணம், அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல் போன்ற பண்புகள் இருந்தால் எதையும் சாதிக்க லாம்.
எந்த மாணவரும் கெட்டவர் கிடையாது. சில புறக்கணிப்புகளால் அவர்களை நாம் அப்படி புரிந்துகொள்கிறோம். அவர்கள்தான் உண்மையிலேயே மிகவும் பாசமாக இருக்கிறார்கள்.
தவறானவர்கள் என நினைத்த சிலருடன் பேசும்போதுதான் அவர் களின் நிலை நமக்கு புரிந்தது. சிலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வுகளும் உண்டு என்றார்.
பார்வையற்ற மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில்கொண்டு, தனது சொந்த முயற்சியால் www.eyesightindia.in என்ற வலை தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் அவர்களுக்கு தேவையான அனைத்து விண் ணப்பங்கள், பாடமுறைகள், ஆடியோக்கள் மட்டுமின்றி,
சராசரி மாணவர்களுக்குத் தேவையான போட்டித் தேர்வு நூல்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தியாவிலேயே பார்வை யற்ற தேசிய சதுரங்க நடுவராக பாண்டியராஜன் மட்டுமே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது