ரொமாண்டிக்கை தாண்டி பெண்கள் விரும்பும் சில விஷயங்கள் !

• தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். பேச, பேச, குறுக்கே பேசுவது, முழுதாய் புரிந்துக் கொள்ளாமல் காச்சு மூச்சென கத்தக் கூடாது என பெண்கள் எதிர் பார்க்கிறார் கள்.


ஆனால் சண்டை என்று வந்து விட்டால் ஆண்கள் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேட்ப தில்லை என்பது பெண்கள் கூறும் முதல் குற்றச்சாட்டு.

• அவனும் சுதந்திர மாக இருக்க வேண்டும், எங்களையும் சுதந்திர மாக இருக்க அனுமதிக்க வேண்டும். வேலை, சுய விருப்பங்கள் போன்றவற்றில் தலை யீடுகள் இருக்க கூடாது 

என்பதில் இன்றைய பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கி றார்கள். கணவராக இருந்தால் பிரைவசி வேண்டும் என்பது தான் இன்றைய பல பெண்களின் எதிர்பார்ப்பு.

• எந்த செயலாக இருந்தாலும், மற்றவர் உதவியை எதிர் பாராமல் தனிச்சை யாக செயல்பட கூடிய ஆண்களை மிகவும் பிடிக்குமென பெண்கள் கூறுகி றார்கள். 

எதற்கும் மற்றவர் களின் உதவியை எதிர்ப் பார்க்காமல் தன்னால் எதுவும் முடியும் என்று எந்த செயலையும் முயன்று பார்க்கும் ஆண்களு க்கு தான் தங்களின் முதல் ஓட்டு என்பது பெண்களின் கருத்து.

• எதற்கெடு த்தாலும், எதிர் மறையாக பேசவது, ஏதாவது செய்யும் போது இது சரியாக வருமா? என கேள்விகள் கேட்பது என இல்லாமல், நேர்மறை எண்ணங் களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள் பெண்கள். 

எந்த ஒரு பிரச்சனை யாக இருந்தாலும், கடினமாக வேலையாக இருந்தாலும் உன்னால் முடியும் என்று உற்சாகப் படுத்தும் கணவரையே பெண்கள் அதிகம் நேசிக்கி ன்றனர்.

என்ன சூழ்நிலை யாக இருந்தாலும் தங்களோடு, தங்களுக்கு உறுதுணை யாக இருப்ப வர்களே 

எங்களு க்கு வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என விருப்பப் படுகிறார் கள் பெண்கள். இந்த குணாதிசயம் மிகவும் முக்கிய மானது என்றும் கூறுகி றார்கள்.

• மனதளவில் முதிர்ச்சி யாக இருக்க வேண்டும். என்ன செய்தாலும், ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்தால் கூட பரவா யில்லை. ஆனால், எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும். 

செயலில் இறங்கிய பிறகு யோசிப்பது தவறு. வெளி வேலை களில் மட்டு மின்றி வீட்டிலும் கூட இதை கடைப் பிடிக்க வேண்டும் என எதிர் பார்கிறார்கள் பெண்கள்.
Tags:
Privacy and cookie settings