பயங்கரவாதியை கொல்ல வேண்டும் என்பது நோக்கம் இல்லை... போலீஸ் !

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் வெடித்து உள்ளநிலையில் எந்த ஒரு பயங்கரவாதியையும் கொல்ல வேண்டும் 
என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது என்று போலீஸ் கூறி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில சி.ஐ.டி. போலீஸ் பிரிவி உயர் அதிகாரி எஸ்.எம். சகாய் பேசுகையில், “எந்தஒரு பயங்கரவாதியையும் கொல்ல வேண்டும் 

என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது, அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது கைது செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். இளைஞர்களை கட்டுப்படுத்த நாங்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம்.

ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியை நோக்கியே எடுத்துச் செல்ல வேண்டும். தமால் காஞ்சிபுரா போலீஸ் நிலையம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. சிலர் அவர்களிடம் இருந்த ஆயுதங்களால் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். 

போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர். ஒரு போலீசாரை இன்னும் காணவில்லை. மாநிலத்தில் தற்போது உள்ள நிலையில் முன்னேற்றம் காணப்பட்டால், 

நாங்கள் எங்களுடைய சேவைகளை தொடங்குவோம், அமர்நாத் யாத்திரையும் வெகுவாக தொடங்கும்,” என்று கூறிஉள்ளார்.
Tags:
Privacy and cookie settings