நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பது குறித்து இப்போது நீங்களே முடிவு செய்யலாம். இதற்கான ஆப்சன்களை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.
ஒருவர் இறந்த பின் அவரது பேஸ்புக் பக்கத்தை நெருங்கிய நண்பர்களோ, குடும்பத்தினரோ நிர்வகிப்பதற்கோ, பயன் படுத்துவதற்ககோ பேஸ்புக்
நிறுவனம் இதுவரை அனுமதி அளித்ததில்லை. தற்போது அதற்காக சிறப்பு ஆப்சனை பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கியுள்ளது.
நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து Legacy Contact என்ற ஆப்சன் மூலம் தெரிவிக்கலாம்.
அவர்கள் உங்கள் ப்ரொபைல் மற்றும் கவர் படங்களை மாற்ற முடியும்.
இதற்கான முழுவிவரங்களை உங்கள் பேஸ்புக் பக்கத்தின் செட்டிங்கில் Legacy Contact என்ற ஆப்சனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.