நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதிரி ஆஸ்திலியாவை சார்ந்தவர் இஸ்லாமிய ஆடை அமைப்பை பேணகுடியவர் அவர் ஹிஜாபை பேணுகிறார் என்ற ஒரே காரணத்திர்க்காக
அவரை பயங்கரவாதியாகவும் ISIS அமைப்போடு தொடர்ப்பு உடையவர் என்றும் பலர்கள் விமர்ச்சித்து வந்தனர்
தனது தரப்பு நியாயத்தையும் தமக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்ப்புல் இல்லை என்பதையும் அவர் எவ்வளவோ எடுத்து கூறியும் யாரும் நம்ப தயாராக இல்லை டுவிட்டர் வழியாக அவரை கடுமையாக வசைபாடிகொண்டிருந்தனர்
இந்த நிலையில் திருகுர்ஆனின் ஒரு வசனத்தின் கருத்து தனது நினைவுக்கு வந்ததாகவும் அந்த திருமறை வசனத்தை நடைமுறைபடுத்தி தமக்கு எதிராக தோன்றியுள்ள விமர்ச்சனத்தில் இருந்து விடுபட
எண்ணயிதாகவும் கூறிய அந்த சகோதிரி அந்த வசனத்தையும் விளக்கினார் ஆம் வெளிச்சம் வந்துவிட்டால் இருள் தானக மறைந்துவிடும் என்ற கருத்தை தரும் .இறைவசனம் தான் அது
தம்மீது வைக்கபடும் விமர்ச்சனம் என்னும் இருட்டை தாம் செய்யும் தர்மம் என்னும் வெளிச்சத்தால் விரட்ட எண்ணினார்
தம்மை வசைபாடி பதியபடும் ஒவ்வொரு டுவிட்டுக்கும் 1 டாலர் தர்மம் செய்யபடும் என்று அவர் அறிவித்தார் முதல்கட்டமாக தமக்கு எதிராக பதியபட்ட 1000 டுவிட்டுகளுக்காக 1000 டாலர்களை யுனிசெப் என்னும் குழந்தைகள் நல அமைப்புக்கு அனுப்பி வைத்தார்
இதனை தொடர்ந்து அவருக்கு எதிராக விமர்ச்சகங்கள் குறைய தொடங்கி ஆதரவு பெருக தொடங்கியது
தற்போது அவருக்கு எதிரான விமர்ச்சனங்கள் குறைந்து விட்டாலும் வரும் குறைந்து விமர்ச்சனங்களையும் தவறாமல் எண்ணி அதர்க்கான டாலர்களை தர்மம் செய்து விடுகிறார்.