கடந்த மே மாதம் நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது சாரி முன்னணி ஆட்சியைப் பிடித்தது.
அச்சுதானந்தன் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்றார்.
அச்சுதானந்தனுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணை யான பதவி வழங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்தார். ஆனால் அதை பினராயி விஜயன் விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.
இதுவரை அரசியலில் கோலோச்சிய அச்சுதானந்தன் தன்னுடைய 93-வது வயதில் திரைப் படத் துறையில் கால் பதிக்கிறார். கேம்பஸ் டைரி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.
அந்த படத்தின் கதையில், பன்னாட்டு குடிநீர் நிறுவனத்துக்கு எதிராகப் போராடும் மாணவர் களுக்கு ஆதரவாக களமிறங்கும் அச்சுதானந்தன் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்.
வரும் 9-ம் தேதி கூத்துபரம்பா பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் அச்சுதானந்தன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.