பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான பீஸ் டிவியை தடை செய்ய உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில், கஃபே ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களில் இருவர் பீஸ் டிவியின் போதகர் சாகிர் நாய்க்கின் நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு மத்தியில் வங்கதேச அரசு இந்த தடை முடிவை எடுத்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை சாகிர் நாய்க் மறுத்துள்ளார்.
இச்சூழலில், வங்கதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்து தினங்களுக்கு மேல் வராமல் போனால் உடனடியாக அதிகாரிகளை எச்சரிக்கை செய்யும்படி வங்கதேச அரசு எச்சரித்துள்ளது.
இந்திய அரசும் இந்த சேனலைப் பார்க்க முடியாமல் தடுக்க முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.