இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் விமான நிலையத்தின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில்,
இந்த பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. உலக அளவில் லட்சக்கணக்கான பயணிகளிடம் 9 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி,
இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த100 விமான நிலையங்கள் பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இதில் முதலிடத்தை பிடித்துள்ளது சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம். இரண்டாவது இடத்தை சியோல் இன்சியோன் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை மூனிச் விமான நிலையமும்,
டோக்யோ ஹனேடா 4வது இடமும், ஹாங்காக் சர்வேதச விமான நிலையம் 5வது இடமும், மற்றவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளது.
வளைகுடா நாடுகளில் கத்தாரின் தோஹா ஹமத் விமான நிலையம் 10 வது இடத்தையும், துபாய் சர்வதேச விமான நிலையம் 26வது இடத்தையும்,
அபுதாபி விமான நிலையம் 38வது இடத்தையும், பஹ்ரைன் 44வது இடத்தையும், மஸ்கட் விமான நிலையம் 94வது இடத்தையும் பெற்றுள்ளது,
இந்தியாவிலிருந்து டெல்லி சர்வேதச விமான நிலையம் 66 வது இடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு 58வது இடத்தை பெற்றிருந்தது. மும்பை 64வது இடத்தையும் சென்ற வருடம் 141வது இடத்திலிருந்தது.
பெங்களூரு விமான நிலையம் 74வது இடத்தைபெற்றுள்ளது. 100 விமான நிலைய பட்டியலில் ரஷியாவில் கஸன் விமான நிலையம் 100வது இடத்தை பெற்றுள்ளது.