வெறும் சீனிவாசன் என்று சொன்னால் இப்போதும் கூட ஒருவருக்கும் தெரிய மாட்டேங்குது. அந்த அளவுக்கு பவர் ஸ்டார் என்ற பெயரின் தயவில் கோடம்பாக்கத்தில் ஜோராக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் சீனிவாசன்.
லத்திகா என்ற படத்துக்காக ரசிகர்களிடம் கோழி பிரியாணியும் குவார்ட்டருமாகப் போட்ட முதலீட்டை இப்போது திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் அட்ரா மச்சான் விசிலு. இந்தப் படத்தை புரமோட் செய்ய என்னென்னமோ செய்து வருகிறார்கள்.
அதில் ஒன்று தியேட்டர் விசிட். அதாவது படத்தில் நடித்த ஹீரோ அல்லது ஹீரோயின் படம் ஓடும் தியேட்டரில், இடைவேளையில் ரசிகர்களைச் சந்திப்பது.
அட்ரா மச்சான் விசிலுக்காக உதயம் தியேட்டரில் ரசிகர்களை பவரு சந்திப்பதாகத் திட்டம். அறிவிப்பெல்லாம் கொடுத்தாயிற்று. செய்தி யாளர்களையும் வரச் சொல்லியிருந்தார் படத்தின் பிஆர்ஓ.
முதலில் 3 மணிக்கு வருவதாக பவரு சொல்லியிருந்தார். வரவில்லை. அடுத்து 4.30 மணிக்கு வருவார் என்றார்கள். அந்த நேரத்தைத் தாண்டியும் வரவே இல்லை.
இத்தனைக்கும் ஒன்றுக்கு நான்கைந்து முறை பவரைக் கேட்டு, அவர் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் கைநீட்டிப் பணம் வாங்கிய நடிகர் கடைசி நேரத்தில் காலை வாரினார்.
சரி, வராமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா?
அவருடைய விக்கை பீரோவில் வைத்துப் பூட்டிக் கொண்டு போய் விட்டாராம் மனைவி. 'விக் இல்லாமல் வெளியில் வந்தால் இமேஜ் டர்ராயிடுமே..
அதான் சார் வரல' என்று இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் காரணம் சொன்னாராம் புவரு!
இதெல்லாம் ஒரு காரணமாய்யா என்று கேட்கத் தோணுதா... அதுக்கு முன்னாடி விக் இல்லாத புவர் ஸ்டாரைக் கொஞ்சம் பாத்துடுங்க!