கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பயோ டீசலில் இயங்கும் பேருந்து சேவை நேற்று தொடங்கப் பட்டது.
பெங்களூருவில் உள்ள கெங்கல் அனுமந்தையா தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி,
பெங்களூரு - சென்னை இடையே யான பயோ டீசலில் இயங்கும் பேருந்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய ராமலிங்க ரெட்டி, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசு படுகிறது. பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களுக்கும் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற் படுகிறது.
இந்த பிரச்சினையை சமாளிக் கும் வகையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காத உயிரி எரி பொருளில் (பயோ டீசல்) இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பெங்களூரு - சென்னை இடையே உயிரி எரிபொருளில் இயங்கும் பேருந்து சேவை தொடங்கப் பட்டுள்ளது.
இதை பின்பற்றி நாடு முழுவதும் உயிரி எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மேயர் மஞ்சுநாதரெட்டி, சாந்திநகர் எம்எல்ஏ என்.ஏ.ஹாரீஸ், கர்நாடக போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் இ.வி.ரமணரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.