ஊர்வன பாம்பு, பல்லிகளுடன் விளையாடும் குழந்தைகள் | children playing with Reptiles !

அமெரிக்காவில் ஊர்வன விலங்குகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட தந்தை ஒருவர், அந்த விலங்குகளுடன் தனது குழந்தைகளையும் விளையாட விட்டு ரசித்துப்பார்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் எரிக் லெப்லங்க் என்பவர், நூற்றுக்கணக்கான பல்லிகள் மற்றும் பாம்புகளை வளர்த்து வருகிறார். 

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், சில விலங்குகள் இறந்து போனது. மேலும் சில விலங்குகள் காயம் அடைந்தன, இதனால் எஞ்சியிருந்த விலங்கினங்களை தனது வீட்டிற்கு மாறியுள்ளார்.

மேலும், இவரது மூன்று குழந்தைகளும், பள்ளிகள் மற்றும் பாம்புகளுடன் விளையாடுவதற்கு அனுமதித்துள்ளார். இதில் அச்சமூட்டும் விடயமாக 19 அடிகொண்ட பைதான் (python) என்ற விஷமில்லாத மலைப்பாம்புடன்

குழந்தைகள் விளையாடுகின்றனர். இதுகுறித்து எரிக் லெப்லங்க் கூறுகையில், ஊர்வன விலங்கினங்களை வளர்ப்பது எனது பணி மட்டுமல்லாமல், 

அது எனது கட்டுக்கடங்கா உணர்ச்சி கொண்ட ஒன்றாகும். நான் எவ்வாறு, இவற்றினை வளர்க்கும்போது அச்சமில்லாமல் தைரியமாக செயல்படுகிறேனோ, அந்த தைரியம் எனது குழந்தைகளுக்கும் வரவேண்டும். 

தங்களுடன் வாழும் ஒரு நபராக அவர்களை இவற்றினை கருத வேண்டும். எனது குழந்தைகளை பாம்புகள் மற்றும் பல்லிகள் கடித்துள்ளன. ஆனால் அவர்கள் நலமுடன் தான் இருக்கிறார்கள்.

எனது மகள் செல்பி, 19 அடியுடைய மலைப்பாம்புடன் தைரியமாக விளையாடுவாள். அது எனது மகளை சுற்றி செல்லும் போது, 

அதனை எனது மகள் இறுகப் பிடித்துக் கொள்வாள். அந்த பாம்பின் தடித்த தசைகள் அவளுக்கு பிடிக்கும் என்பதால் அதனுடன் தைரியமாக விளையாடுவாள். இதனைப் பார்க்கும் சிலர்,

இது மிகவும் ஆபத்தான விடயம் என்று கூறுவார்கள். ஆனால், எனது குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.பாம்பு, பல்லி, நாய்களிடம் கடி வாங்கிய எனக்கு அது ஒரு பெரிய ஆபத்தாக தெரியவில்லை. 

ஆனால், என் வாழ்வில் நான் சந்தித்த மிகப்பெரிய ஆபத்து எதுவென்றால், மரத்தில் இருந்தது நான் கீழே விழுந்ததுதான். ஆனால் அந்த விபத்தில் கூட எனக்கு பெரிதாக ஒன்றும் நேரவில்லை. 
விலங்குகளுக்கு மரியாதை செலுத்தினால், அந்த விலங்குகளும் நமக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல், நம்மோடு நலமாக வாழும்" என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings