பாதாள அறையில் தங்க கட்டிகள்.. இங்கிலாந்து !

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில் சாலையில் இங்கிலாந்து வங்கி (Bank of England) இயங்கி வருகிறது. இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள 
பாதாள அறையில் தங்க கட்டிகள்.. இங்கிலாந்து !
பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகில் உள்ள ஒட்டு மொத்த தங்கத்தின் இருப்பை ஒப்பிடும் போது, இங்குள்ளது சுமார் ஐந்தில் ஒரு பகுதி ஆகும். சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள 

இந்த ரகசிய அறையில் உள்ள தங்கத்தின் ஒட்டு மொத்த மதிப்பு 172 பில்லியன் பவுண்ட் (16,51,389,99,35,220 ரூபாய்) ஆகும்.

இது மட்டுமின்றி, லண்டன் நகர வீதிகளின் நிலப்பரப்பிற்கு கீழ் ஆங்காங்கு சுமார் 1,000 டன் எடைக்கும் அதிகமான தங்கக் கட்டிகளும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1930-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த ரகசிய பாதாள அறைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். 
அது மட்டுமில்லாமல், இந்த அறைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் ‘குரல் ஒலி’ மற்றும் 3 அடி நீளமுள்ள சாவியும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 2012-ம் ஆண்டு கடைசியாக இந்த ரகசிய பாதாள அறையை ஆய்வு செய்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings