பார்க்காமலேயே செய்த காதல் போய் ஆப் வழி காதல் !

வாலென்டைன்ஸ் டே நெருங்கி விட்டது. காதலர்கள் பார்ட்னர்களுடன் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். சிங்கிள்ஸ்கள் யாரை புரோபாஸ் பண்ணலாம்னு ஆராய்ச்சில இறங்கிட்டு இருக்காங்க.
பார்க்காமலேயே செய்த காதல் போய் ஆப் வழி காதல் !
ஆனால் தெருவுல நின்னு இல்ல... ஆப் வழியாக. பார்க்காமலேயே காதல், பார்த்த பின்னர் வந்த காதல் எல்லாம் போய் இப்போ 'ஆப் ' வழி காதல் காலத்தில் இருக்கிறோம்.

உங்களுக்கு பிடித்த மானவர்களை இப்போது ஆப்ஸ்களே தேர்வு செய்து தருகிறது. அந்த வகையில் 7 வாலென்டைன்ஸ் டே ஆப்ஸ்கள் களத்தில் இருக்கின்றன.

'ஓகேக்யூபிட்'

ok.jpgஇந்த ஆப்தான் வாலென்டைன்ஸ் டேவுக்கு என்று உருவாக்கப்பட்ட முதல் ஆப்.

'ஒகேக்யூபிட்' என்றால் உங்கள் பார்ட்னரை நாங்கள் தருகிறோம் என்று தான் அர்த்தம். உள்ளே என்ட்ரியானதுமே உங்களுக்கு பிடித்தவர்களின் புரொஃபல்களை 

மின்னல் வேகத்தில் தேடலாம். உங்களுக்கு பிடிச்சவங்களோட புகைப்படங்களையும் நீங்கள் பார்க்க முடியும். 

ஆனால் இந்த ஆப் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் உங்களுக்கு தலையே கிறு கிறுத்து விடும். எல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான். 
இந்த ஆப்-பில் உள்ள குறைபாடு இன்பாக்சில் குறைந்த அளவு கான்வர்சேஸன்களே சேமித்து வைத்துக் கொள்ள முடியும். எனவே புத்தி சாலித்தனமாக செயல்படுவது அவசியம்.

'டின்டர்'

டேட்டிங்களுக்கு இந்த ஆப் தான் அகில உலக ஃபேமஸ்.. இந்த ஆப்-பில் ஒருவரே பல புரொபல்களை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்தமானவரை தேர்வு செய்த பின்னர், 

அவர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம். நாம் பேசும் நபர் உண்மையான தகவல்களைத் தான் தருகிறாரா? என்பதை ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. 

இந்த ஆப்-பில் இருந்து ஒருவருக்கு அப்ளிகேசன் போட்டு, அவர் ஓகே செய்து விட்டால், நீங்கள் அவருடன் சாட்டிங் செய்ய முடியும்.

வூ
உங்களை போன்றே குணநலன்களும், டேஸ்ட்களையும் கொண்டவரை காட்டிக் கொடுக்கும் ஒரு ஆப் இது. ஒருவருக்கு ஒருவர் பொருத்தம் எப்படி இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும். 

சம்பந்தப்பட்டவர்களை பற்றிய புரொஃபைல்ஸ், பயோடேட்டாக்களும் இந்த ஆப்-பில் இருக்கும். நீங்கள் கேட்கும் சமயத்தில் உடனடியாக பதில் வரவில்லை யென்றால், 

உங்கள் கேள்விகளுக்கு விருப்பம் இருக்கும்போது பதில் அளிக்கும் வசதியும் இந்த ஆப்-பில் இருக்கிறது. இதற்காக டாக் சர்ச் ஆப்சனும் உள்ளது.

'ட்ரூலி மேட்லி'
இருக்கும் ஆப்ஸ்களிலேயே மிகவும் பாதுகாப்பான ஆப்-பாக இதுதான் கருதப்படுகிறது. டேட்டிங்குக்கு புகழ்பெற்ற ஆப் இது. 

இதனை பயன்படுத்துபவர்கள் ஃபேஸ்புக் அல்லது லிங்லைன் வழியாக தங்கள் விரும்பியவரின் புரொஃபைல்களை செக் செய்து கொள்ளலாம்.

'பம்பிள்'

இது பெண்கள் விரும்பும் ஆப். பெண்களிடம் உங்களுக்கு பிடித்தவர் எப்படி இருக்க வேண்டும். உங்களவர் பற்றிய கனவு என்ன? என்ற கேள்வியைதான் முதலில் வைக்கும். 

பெண்கள் தங்களுக்கு பிடித்தவரை எளிதாக அப்ரோச் செய்ய இந்த ஆப்-பில் வழிவகை உண்டு. தங்களுக்கு பிடித்தவருடன் 24 மணி நேரம் மெசேஜ் அனுப்பலாம். 24 மணி நேரத்துக்கு பிறகு அந்த வாய்ப்பு இருக்காது. 
தானாகவே அழிந்து விடும். இந்த ஆப்-பில் 'பைபி' என்ற ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இதன் மூலம் பெர்ஃபெக்ட் பார்ட்னரை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

'ஹாட் ஆர் நாட் '

இது காதல் விளையாட்டு ஆப். ஃபேஸ்புக் வழியாக சைன் இன் செய்து விட்டு உங்களை சுற்றி இருப்பவர்களில், உங்களுக்கு பிடித்த மானவர்களுக்கு உங்களது படங்கள் போன்றவற்றை அனுப்பலாம். 

இந்த ஆப் உங்கள் மொபைல் எண்ணை கேட்கும். பின்னர் உலகம் முழுக்க நீங்கள் மெசேஜ் அனுப்பலாம், படிக்கவும் செய்யலாம். மிகவும் பாதுகாப்பான ஆப்-பும் கூட.

'ஹிட்ச்'

இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது ஹிட்ச். இந்த ஆப் சமூக வலைதளங்களை வைத்து உங்கள் அருகில் இருப்பவர்களை உங்களுக்கு காட்டும். 

உங்களை போன்ற டேஸ்ட் உள்ளவர்களை உங்களுக்கு பரிந்துரைக்கும். 
சில சமயங்களில் உங்கள் புரொஃபலை நீங்கள் விரும்பு பவர்களுக்கு காட்டாமலேயே உங்களுக்கு பிடித்த மானவர்களுக்கு வாழ்த்து சொல்ல முடியும். இதற்காக பிரைவேட் மோட் வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.
Tags:
Privacy and cookie settings