ஊட்டி செல்லும் அனைவருக்குமே ஞாபகம் வருவது இரண்டே விஷயங்கள் தான், அழகான மலைகளும், ஊட்டி மலை ரயிலும் தான். ஊட்டி செல்லும் அனைவருமே ஒரு முறையாவது
இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அந்த மலை ரயிலில் சுட்டீஸ்களுடன் ஒரு ஜாலி ட்ரிப் போனோம்.
ஊட்டி மலை ரயிலின் சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியருடன் சுட்டீஸ்கள் கலந்துரையாடினர். ரயில் எப்படி இயங்குகிறது..?
மீட்டர் கேஜ், நேரோ கேஜ், பிராட் கேஜ் இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்,
ஊட்டி செல்லும் வழியில் உள்ள குகைகள் என சுட்டீஸ்களிடமிருந்து வந்த ராக்கெட் வேக கேள்விகளுக்கு பதில் சொன்னார் அந்த சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியர்.