பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த டேவிட் கேமரூன் நேற்று பதவியை துறந்து விடைபெற்று செல்லும் முன்பு காரசாரமான இந்திய ஸ்டைல் உணவுகளை சாப்பிட்டுள்ளார்.
ஏசு கிறிஸ்துவின் 'லாஸ்ட் சப்பர்' உணவருந்திய நிகழ்ச்சியை போல இதை ஒப்பிடுகிறார்கள் பிரிட்டீஷ் குடிமக்கள். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டும் என்று
அந்த நாட்டு மக்களில் பெரும் பான்மையானோர் வாக்களித்தனர். இதையடுத்து, தனது பதவியை தானாக முன் வந்து துறந்தார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
அந்த நாட்டு மக்களில் பெரும் பான்மையானோர் வாக்களித்தனர். இதையடுத்து, தனது பதவியை தானாக முன் வந்து துறந்தார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
கேமரூன் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய பிரதமராக தெரசா மே-ஐ கை காட்டியது. எலிசபெத் மகாராணியின் அனுமதியின் பேரில் இன்று தெரசா புதிய பிரதமரானார்.
இதனிடையே, லண்டன், 10 டவ்னிங் ஸ்ட்ரீட்டிலுள்ள, பிரிட்டன் பிரதமரின் அலுவலக வீட்டில், நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய லண்டன் பகுதியிலுள்ள 'கென்னிங்டன் தந்தூரி' (K.T) ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்யப் பட்டிருந்தது.
உணவக ஊழியர் பைக்கில் அந்த உணவை பிரதமர் அலுவலகத்திற்கு 'டோர் டெலிவரி' செய்தார். இதை லாஸ்ட் சப்பர் உணவு என வர்ணித்து டிவிட் செய்துள்ளது அந்த ரெஸ்டாரண்ட்.
ஹைதராபாத் சஃப்ரான் சிக்கன், காஷ்மீரி ரோகன் ஜோஷ், நஷீலி கோஸ்ட், கேடி மிக்சட் கிரில் (செம்மறியாட்டு கறி மற்றும் சிக்கன் கலந்தது),
சிக்கன் ஜல்ப்ராசி, சாக் ஆலூ, சாக் பன்னீர், பாலக் கோஸ்ட், வெஜ் சமோசா, நான் பிரெட் மற்றும் சோறு ஆகியவை பிரதமருக்கு சப்ளை செய்யப் பட்டுள்ளது.
1985ம் ஆண்டு கென்னிங்டன் தந்தூரி ஹோட்டல் தொடங்கப் பட்டது முதலே, பல்வேறு அரசியல் தலைவர்களின் ஃபேவரைட் ரெஸ்டாரண்டாக இது விளங்கி வருகிறது.
இதற்கு முன்பும் பிரதமர் அலுவலகம் இந்த ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்துள்ளது என ஹோட்டல் நிர்வாகம் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
டேவிட் கேமரூனுக்கு இந்திய உணவு வகைகள் என்றால் கொள்ளை பிரியம். இந்திய உணவுகள் "pretty hot" என்று அவ்வப்போது கேமரூன் கூறியுள்ளார்.
பிரதமர் பதவியை துறக்கும் நேரத்திலும், தனக்கு பிடித்த இந்திய ஸ்பைசி உணவுகளையே கேமரூன் விரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.