வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா? எச்சரிக்கை யாக இருங்கள் உலகின் எந்த மூலையி லிருந்தோ நீங்கள் கவனிக்க ப்பட்டுக் கொண்டிருக் கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணைய தளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக் கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்து தான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழைய வில்லை?
எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்ப வில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம் பிடித்தது யார்? அது எப்படி சாத்திய மாயிற்று?
புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிரா தான் அவளை படம் பிடித் திருக்கின்றது. செய்வதை யெல்லாம் செய்து விட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந் திருக்கிறது
அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள் அவள் அறையில் உடைமாற்று வதையும் அவளின் அந்தரங்கங் களையும் படம் பிடித்தது அந்த வெப்கேமிரா தான்.
மீடியாத் துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப் பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக் காக சில படங்களை இணையத் திலிருந்து டவுன்லோடு செய்திருக் கின்றாள்.
ஆனால் அவளுக்குத் தெரியா மலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது
அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப் பட்டுள்ள வெப் கேமிராவை ரிமொட்
முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம் பிடித்து அவற்றை ஆபாச இணைய தளத்திற்கு விற்றுக் கொண்டிருந்தி ருக்கின்றான் எவனோ ஒருவன்.
உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப் படங்களும் அந்தரங் கங்களும் திரைப் படமாக்கப் படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.
இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திரு க்கின்றாள்.
இணையத்தில் உலவி விட்டு அணைக் காமல் அப்படியே இருந்து விட்டது தான் அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல் தானே அமர்ந்திரு க்கின்றது
அது வென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்து விட முடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்ட மிட்டுக் கொண்டிரு க்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகி க்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத் தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று அலட்சியப் படுத்தினால் நம் அந்தரங் கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்து விடும்.
'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திரு ப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்.
அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லை யெனில் அதன் இணைப்பையும் வெப்கேமி ராவின் இணைப்பையும் துண்டித்து விடுங்கள்.
இந்த விழிப்பு ணர்வினை தங்களுக்கு தெரிந்த வரையிலும் மக்களுக்கு தெரியப்ப டுத்தினால் தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.
தேவை யில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லா விட்டாலும் அதனை கணிப்பொறி யுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.
இதனால் நிறைய பேர் பாதிக்கப் பட்டிருக் கின்றார்கள். பாதிக்கப் பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்தி ற்குரியது.
இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும் பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக் கொள் ளுங்கள்.
அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிரா ம்களை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல தேவை யில்லாத
அல்லது கவர்ச்சியான விளம்பரங் களுடன் வருகின்ற மின்னஞ்சல் களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்து விடுங்கள்.
தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப் பட்டிரு கின்றதா என்று தயவு செய்து ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இணையத்தில் உலவும் பொழுது மட்டும் இணையத் தொடர்பினை இணைத்து விட்டு மற்ற நேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறி யிலிருந்து எடுத்து விடுங்கள்.
அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறி யுடன் இணைக் காமலேயே வைத்திருங்கள்.
இல்லை யென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப் பட்டுக் கொண்டி ருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.