இனி ஆயுஷ் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு !

ஆங்கில மருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் 
இனி ஆயுஷ் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு !

மருத்துவக் காப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது மருத்துவக் காப்பீடு பெரும்பாலும் அலோபதி சிகிச்சைக்கு மட்டுமே உள்ளது. 


ஆயுஷ் முறை மருத்துவத்தில் சில குறிப்பிட்ட வகை நோய்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை அளிக்கப் படுகிறது. 

இந்த தொகையும் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ மனைகளின் சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

மேலும் அலோ பதியை போன்று பணம் இல்லா சிகிச்சை முறை இல்லாமல் சிகிச்சைக்கு பிறகே ஆயுஷ் மருத் துவத்தில் பணம் தரப்படுகிறது.

இந்த வேறுபாடுகளை களைந்து, அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டு களாக கோரிக்கை எழுந்து வருகிறது. 

இதற்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கு மாறு மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதற்கான நடவடிக்கையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தீவிர மாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சக செயலாளர் அஜீத் ஷரண் தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. 

இதில் காப்பீடு நிறுவனங் கள் மற்றும் ஆயுஷ் மருத்துவ மனை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இது குறித்து ‘தி இந்து’விடம் ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, 

அலோபதிக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என எங்கள் அமைச் சகம் விரும்புகிறது. இதைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர். 

என்றாலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும் காப்பீடு தொகை அளிக்கலாம் என்றும் மருத்துவ மனைகளின் தரம் குறித்தும் நிர்ணயிக்கப்பட வேண் டும் என கருத்து கூறியுள்ளனர். 

எனவே மேலும் சில ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு ஆயுஷ் சிகிச்சைக்கும் காப்பீடு அளிக்க ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஆயுஷ் சிகிச்சைக் கான காப்பீடு விதிமுறைகளை தளர்த்தி, தனியார் மருத்துவமனைகளுக்கும் அதை விரிவுபடுத்த இக்கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறப் படுகிறது.

இத்துடன், கழுத்து எலும்பு தேய்வு, கீழ்புற முதுகுவலி, பக்கவாதம், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு தேய்மானம், கைகால் மூட்டுகள் வலி, 

தீவிர தோல் நோய்கள் உட்பட சுமார் 20 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அத ேசமயம் இந்த 20 நோய்கள் பூரண குணமாகும் வரை இல்லாமல், மருத்துவமனையில் உள்நோயாளியாக பெறும் சிகிச்சைக்கு மட்டும் காப்பீடு அளிப்பது எனவும், 

அடுத்த கூட்டத்தில் அதற்கான பிரிமீயம் தொகை முடிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகும் ஒரு கூட்டம் நடத்தி விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings