ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர், தனது பாதுகாவலனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தப்பி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
ஈராக் நாட்டை சேர்ந்த 12 வயது யாஸிதி என்ற சிறுமி உள்பட 5 பேரை, ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கடத்தி சிறை வைத்துள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்க எண்ணிய சிறுமி, அதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ‘தனக்கு தூக்கம் வரவில்லை என்றும்,
அதனை தீர்க்க தூக்க மாத்திரை கொடுக்குமாறும் தீவிரவாதி ஒருவனிடம் அந்த சிறுமி கேட்டுள்ளார். தீவிரவாதியும் சிறுமிக்கு தூக்க மாத்திரையை கொடுத்துள்ளான்.
ஆனால், அந்த தூக்க மாத்திரையை ரகசியமாக பாதுகாத்து வந்த சிறுமி, அதனை தீவிரவாதி அருந்தும் தேனீரில் கலந்து அவன் தூங்கியதும் அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிறுமி மட்டுமின்றி அவருடன் 17 வயதான உறவின பெண் ஒருவரும், அங்கிருந்து தப்பி தற்போது அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்துள்ளனர்.
ஈராக் நாடாளுமன்ற உறுப்பினரான வியன் தக்கில் என்பவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
எனினும், சிறுமியின் உறவினர்கள் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.