வீரதீர விருது பெறும் பெண் மாலுமி !

இந்திய வணிக கப்பலின் முதல் பெண் கேப்டனாக 5 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்டவர் ராதிகா மேனன். 

வீரதீர விருது பெறும் பெண் மாலுமி ! தற்போது, கடல் பயணத்தின் போது வீரதீர செயல்கள் செய்வததற்காக இவருக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு விருது வழங்க கவுரவித்தள்ளது. 

இந்த விருதினை பெறும் உலகின் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் பயணத்தின் போது பல சவால்களை எதிர்கொண்டு 7 மீனவர்களின் 
உயிரை ராதிகா மேனன் காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவின் காக்கிநாடாவில் புயலால் பாதிக்கப்பட்டு, கடல் பகுதியில் பழுதாகி நின்ற மீனவர்களின் படகால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் உயிருக்காக போராடினர். 

அப்போது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் இருந்த ராதிகா மேனன், விரைந்து வந்து மீனவர்களை மீட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings