ஒலி மாசு என்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்று !

ஆம், ஒலி மாசு என்பது (சுற்று சூழலில் மிகையான சத்தம்) மனதிற்கு ஒவ்வாத ஒன்று. ஒலி அத்துமீறல் தற்போது மிகவும் அதிகரித்து விட்டது. 
ஒலி மாசு என்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்று !
உலக நலவாழ்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் 

ஒலி மாசு காரணமாக தங்களது செவியின் கேட்புத் திறனை இழந்துள்ளனர். 

உச்ச அளவான 75 டெசிபெல்லுக்கும் மேலாக இரைச்சலை உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலை சுற்றல் போன்றவற்றால் பாதிக்கப் படுகின்றனர். 

இயந்திர தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப் படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது இந்தியாவில் ஆயிரத்தில், 35 பேருக்கு காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர் பகுதிகளில் வசிப்போரில் 10 விழுக்காட்டினரும், 

கிராமப் புறங்களில் வசிப்போரில் 7 விழுக்காட்டினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர் களாகவே உள்ளனர்.

ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற நபர்களில் பெரும் பாலானோருக்கு நரம்புத் தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்பு உள்ளதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. 

தொடரும் இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிெபல், அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிெபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல்,

பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80 டெசிபல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் 

பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், அமைதியாக காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல் என கணக்கிடப் பட்டுள்ளது. 

பொதுவாக 50லிருந்து 75 டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப் பட்டுள்ளது. 

ஆனால், பெரும்பாலும் இந்த அளவை காட்டிலும் அதிகமாகவே ஒலி மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 84 விழுக்காடு ஆசிரியர்களுக்கும், 

92 விழுக்காடு மாணவர்களுக்கும் செவித் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 

வாகன போக்குவரத்து நடைபெறும் இடங்களை காட்டிலும், கடைத் தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமிருப்ப தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவை பகலிலும், 45 டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்த அளவு மீறப்படுகிறது.

தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாக கருதப்படும் இந்த ஒலி மாசு ஆணையம், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். 

இதன் மூலம் ஒலி அளவை தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் 

எச்சரிக்கை பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் அறிவுறுத்துதல் மிகவும் அவசியம்.

ஒலி மாசு தொடர்பான தேசிய மற்றும் மண்டல அளவிலான கொள்கையினை வகுப்பதற்கு இந்த ஒலி மாசு கண்காணிப்பு ஆணையம் 

பேருதவியாக இருக்கும்.விரைந்த நகர்மயமாதல், தொழில் மயமாதல் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக நிலம், நீர், காற்று, 

ஒலி ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் மாசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இதன் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சட்டம் மற்றும் நிர்வாக முறை அவசியமாகிறது.

இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பில் முக்கியமான நகரமாக கருதப்படும் பெங்களூருவில் ஒலி மாசு மற்றும் சூழல் மாசு ஆகியவற்றின் காரணமாக
ஒவ்வொரு ஆண்டும் 10 போக்குவரத்து காவலர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தற்போது நகருக்குள் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டி விட்டன. 
ஒலி மாசு என்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்று !
பெங்களூர் நகருக்குள் அலுவல் நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகி விட்டது. 

போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் மட்டும் ஏறக்குறைய மூவாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 

வாகனங்களின் இடைவிடாத ஒலி, தொடர் இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சு விடுதலில் கோளாறு, காது கேளாமை, மந்தம், தூக்க மின்மை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற உடற் கோளாறுகள் இயல்பாகி விட்டன.

போக்குவரத்தினை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கே இந்த பாதிப்பென்றால், ஒலி மாசு நிகழும் இடங்களுக்கு அருகே வாழ்கின்ற பொதுமக்களின் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

நகர்ப்புற வாகனங்கள் 100 டெசிபலுக்கும் மேலான ஒலியை எழுப்புவதால், போக்குவரத்து காவலர் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். 

இது பெங்களூருக்கு மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநகராட்சிகளிலும் இதே நிலை தான்.

போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு ஒலிப்பான்களை, அவரவர் விருப்பம் போல் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்து, 
80 லிருந்து 85 டெசிெபலுக்கு மேற்படாத அளவினை கொண்ட மின்னனு ஒலிப்பான்களை பயன்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 

தொழிற்சாலை பகுதிகளில் 75 டெசிெபல், வணிகப் பகுதிகளில் 65 டெசிெபல், குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிெபல், அமைதிப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 டெசிெபல் என மாசுக்காட்டுப் பாட்டு வாரியம் 

ஒலியின் அளவை இடத்திற்கேற்ப இசை வளித்துள்ளது. இந்த அளவினை மீறும் தனிநபர்களையும், அமைப்புகளையும் கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். 

கிராமப் புறங்களை விட நகர்ப்புறங்களில் ஒலி மாசு அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. 

மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் ஆண்டுதோறும் ஒலி மாசு தொடர்பாக புள்ளி விவரம் சேகரித்து வருகிறது.

தடுப்பது யார்?
இந்திய உச்சநீதிமன்றம் 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்திய சுற்றுச்சூழல் பிரச்னைகளை போக்குவதில் கவனம் செலுத்துகிறது. 

பெரும்பாலான நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளை அரசாங்கத்தின் சட்டத்துறை மற்றும் செயற்குழு திட்டமிட்டு செயல்படுத்துகின்றன.

ஆனால், இந்தியாவின் அனுபவம் வித்தியாசமானது. இந்திய உச்ச நீதிமன்றம் நேரடியாக சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றி விளக்கம் அளிப்பதோடு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

இருப்பினும், ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உலகளாவிய கருத்து. 
ஒலி மாசு என்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்று !
தவறும் பட்சத்தில் உடல் உபாதைகள் அதிகரிப்பதை தடுக்க இயலாது. மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் விரைவான தடுப்பு நடவடிக்கை மேற் கொண்டால் மட்டுமே இதை தடுக்க முடியும்

மிஞ்சி விட்டது கிண்டி

கடந்த 2011-2014ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் லக்னோவில் 69 டெசிபெல், மும்பையில் 70 டெசிபெல், 

டெல்லியில், 74 டெசிபெல், தமிழ்நாட்டில் 75 டெசிபெல் (கிண்டி பகுதி), ஐதராபாத்தில் 77 டெசிபெல் ஒலி மாசு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. 

ஒலி மாசு ஏற்படுவதில் ஐதராபாத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 
குடியிருப்பு பகுதி, வர்த்தக பகுதி, தொழிற்சாலை பகுதி என மூன்று பகுதிகளாக பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப் பட்டுள்ளது. 

எல்லா பகுதிகளிலுமே நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 10 முதல் 20 சதவீதம் கூடுதலாக ஒலி மாசு ஏற்படுகிறது எனவும் இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings