அரசு வாகனத்தை ஒப்படைக்காத எம்.பி. கைது !

இலங்கையில் அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
அரசு வாகனத்தை ஒப்படைக்காத எம்.பி. கைது !
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச வாகனங்கள் உத்தியோக பூர்வமாக வழங்கப் பட்டிருந்தன.

குறித்த வாகனத்தை உரிய அமைச்சகத்தில் திரும்ப ஒப்படைக்குமாறு அறிவிக்கப் பட்டிருந்த போதிலும் அவர் ஒப்படைக்க வில்லை என கூறப்படுகின்றது.

கொழும்பு கொள்ளு பட்டியில் காவல் துறையினரால் நேற்று வாகனமும் ஓட்டுநரும் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன விசாரனைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப் பட்டதாக காவல் துறை கூறுகின்றது.

2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு இவர் நாடாளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அதே ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணைந்து கொண்டார்.

2015ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார்.
Tags:
Privacy and cookie settings