ஒரு மணி நேரம் பறக்க ஒரு கோடி.. ஏர்ஃபோர்ஸ் ஒன் !

அமெரிக்க அதிபரின் உலக சுற்றுப் பயணத்திற்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் உலகப் புகழ் பெற்றது. இதனை ஒரு குட்டி வெள்ளை மாளிகை எனவும் சொல்லலாம்.
அத்தனை வசதிகளும் இதில் உண்டு. தற்போது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக 747-200 ரக போயிங் டபுள் டக்கர் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 1985ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் காலத்தில் ஆர்டர் செய்யப்பட்டு, ஆர்டர் செய்யப்பட்டு, 1990 ஆம் ஆண்டு ஜார்ஜ். டபிள்யூ.புஷ் காலத்தில் ஏர்ஃபோர்ஸ் விமானம் அமெரிக்க அரசுக்கு வழங்கப் பட்டது.

சுமார் 25 வருடங்கள் பணியில் இருந்துள்ளது. எனவே அதனை மாற்றி விட்டு, வேறு இரு ஏர்ஃபோர்ஸ் விமானங்களை வடிவமைக்க அமெரிக்க விமானப்படை முடிவு செய்துள்ளது. 

போயிங்கின் நவீன தயாரிப்பான 747-8 ரக விமானத்தை இனி ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக மாற்ற முடிவு செய்யப் பட்டுள்ளது. 

அந்த வகையில் இரு ஏர்ஃபோர்ஸ் விமானங்கள், 2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. முதல் விமானம் 2020-ம் ஆண்டுக்குள் ஒப்படைக்கப்படும்.
ஏர்ஃபோர்ஸ் ஒன் ஏன் பிரமிக்க வைக்கிறது!

இது பார்க்கதான் சாதாரண விமானம். ஆனால் ஒரு ராணுவ விமானத்திற்குள்ள அத்தனை திறனும் உண்டு. அதனால் தான் இதற்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் என பெயரிடப் பட்டுள்ளது. 

மற்ற விமானங்களிடம் இருந்து இதனை வேறுபடுத்தவே இந்த பெயர். அமெரிக்க அதிபர் ராணுவ விமானத்தில் பறந்தால் அது 'ஆர்மி ஒன் 'என்றும் ஹெலிகாப்டரில் கால் வைத்தால் 'மரைன் ஒன்' என்றும் அழைக்கப்படும்.

தற்போது ஏர்ஃபோர்ஸ் ஒன்னாக பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 747- 200 ரக விமானங்கள், 8 லட்சத்து 33 ஆயிரம் பவுண்ட் எடை கொண்டவை. 

இதன் பெட்ரோல் டாங்குகள் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் பெட்ரோல் கொள்ளவு கொண்டவை. இதனை கொண்டு உலகத்தில் பாதி அளவுக்கு சுற்றி வந்து விடலாம். 
இந்த விமானம் மணிக்கு 700 மைல் வேகத்தில் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. வெளியே இருந்து பார்க்க விமானம் போல இருக்கும். 

ஆனால் உள்ளே 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் கொண்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலவே உள் அலங்காரங்கள் செய்யப் பட்டிருக்கும். அதிபருக்கு என்று தனி படுக்கை அறை, குளியல் அறை, ஓய்வறைகள் உண்டு. 

வெள்ளை மாளிகை முக்கிய அதிகாரிகளுக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் தனி அறைகள் உண்டு. ஆலோசனை நடத்த தனியாக கூடமும் இருக்கிறது. ஏர்போர்ஸ் ஒன்னில் 3 கதவுகள் உண்டு. முதல் கதவு வழியாக அதிபர் பிரவேசிப்பார். 

அவருடன் பயணிக்கும் செய்தியாளர்கள் பின் வாசல் வழியாக உள்ளே அழைத்து செல்லப் படுவார்கள். அவர்களுக்கு விமானத்தின் மற்ற பகுதிகள் தெரியாது.

சில சமயங்களில் அதிபர் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியது இருக்கும். இதனால் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் எந்த சமயத்திலும் உணவு தயாரிப்பதற்கு தயார்நிலையில் உள்ள சமையலறை உண்டு. 
ஒரே சமயத்தில் 2 ஆயிரம் பேருக்கு கூட உணவு தயாரிக்க முடியும். டபுள் டக்கரான இந்த விமானத்தில், சமையல் அறை கீழ் பகுதியில் இருக்கிறது. குறைந்தது ஒரு வேளை 100 பேருக்காவது உணவு தயாரிக்கப்படும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் எப்போதும் தனி மருத்துவக்குழு இயங்கும். அதிபர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் இந்தக் குழு அதிபருடன் பயணம் மேற்கொள்ளும்.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திற் கென்றே பிரத்யேக தரையிறங்கும் படிகள் உள்ளன. இதனால் எந்த விமான நிலையத்திலும் இதற்கென்று தனியாக இறங்கு படிகள் தேவையில்லை.
ஒரு மணி நேரம் பறக்க ஒரு கோடி.. ஏர்ஃபோர்ஸ் ஒன் !
இந்த விமானத்தில் 85 டெலிபோன்கள் இணைப்புகள் உள்ளன. 19 தொலைகாட்சிகள், ஃபேக்ஸ் மெஷின்கள் என பிற வசதிகளும் உண்டு.

ஏர்ஃபோர்ஸ் ஒன் தரையே இறங்காமல் பல மணி நேரம் வானத்தில் சுற்றிக் கொண்டேயிருக்க முடியும். ஏனென்றால் பறக்கும் போதே இதில் பெட்ரோல் நிரப்பவும் வசதி உண்டு.

எதிரிகளின் ரோடரில் ஏர்ஃபோர்ஸ் ஒன் தெரியாமல் இருக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதாவது ரேடார் ஜாம் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.

1943-ம் ஆண்டே அமெரிக்க ஜனாதிபதிக் கென்று பிரத்யேக விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. ஆனால் 1956-ம் ஆண்டு போயிங் 707 வந்த பிறகுதான் நவீன மடைந்தன. 
தொடர்ந்து 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை 747 ரக போயிங் விமானம் தான் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக மாற்றப்பட்டு வருகிறது.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம், ஒரு மணி நேரம் வானத்தில் பறக்க வேண்டுமென்றால் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும். இந்த விமானத்தில் அதிபருடன், அதிகாரிகள் அவரது பாதுகாவலர்கள் என பயணிப்பார்கள்.
Tags:
Privacy and cookie settings