தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. மன்னிச்சிடுங்க.. ராம்குமார் !

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயன்றதால், 
தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. மன்னிச்சிடுங்க.. ராம்குமார் !
கழுத்தில் அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. நேற்று முதல் அவர் திட உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

காலையில் இட்லி சாப்பிட்ட அவர், மாலையில், கிச்சடியும், பாலும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதை சிரமமின்றி அவர் சாப்பிட்டார். 

எனவே காயம் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இரண்டு மருத்துவர்கள், ஒரு நர்ஸ் ஆகியோர் ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. 

இன்று அனேகமாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படலாம் என கூறப்படுகிறது. நேற்று எழும்பூர் நீதிபதி கோபிநாத் ராம்குமாரிடம் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினார்.

ராம்குமாருக்கு 18ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்தார் நீதிபதி. என்னை தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கேலி செய்து இழிவு படுத்தியதால், அப்படி பேசிய வாயை வெட்ட வேண்டும் என்றுதான் அரிவாளோடு சென்றேன். 

கொலை செய்யும் நோக்கத்தோடு வெட்டவில்லை. ஒரு முறை தான் வாயில் வெட்டினேன். வெட்டிய போது அரிவாளை சதைக்குள் இறங்கி மாட்டிக் கொண்டது. எனவே என்னால் அதை வெளியே இழுக்க முடியவில்லை. 
தெரியாமல் கொலை செஞ்சுட்டேன்.. மன்னிச்சிடுங்க.. ராம்குமார் !
பொதுமக்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்ற பயத்தில், வேக வேகமாக அரிவாளை உருவ முற்பட்டேன். அதில் தான் கூடுதலாக வெட்டுபட்டு சுவாதியின் உயிர் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இது தெரியாமல் செய்த தவறு. என்னை மன்னித்து விட்டு விடுங்கள். 

இவ்வாறு மருத்துவமனை ஊழியர்களிடமும், போலீசாரிடமும், கண்ணீருடன் கதறியுள்ளார் ராம்குமார். இவ்வாறு மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:
Privacy and cookie settings