மின்சார வாகனங்களுக்கான திட்டம் !

சுற்றுச் சூழல் காப்பு என்பது இப்போது மிகவும் அவசியமானதாகி விட்டது. நகரங்களில் அதிகரிக்கும் வாகனங்களால் சுற்றுச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. 
மின்சார வாகனங்களுக்கான திட்டம் !
மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்த வசதியாக பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் முதல்படியாக 16 வயது நிரம்பியவர்கள் பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களை ஓட்ட அனு மதிப்பது என்று அரசு முடிவு செய்துள் ளது. 

(தற்போது 18 வயது நிரம்பியவர்கள் தான் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற முடியும்). 

இதேபோல வாகனங்களை சார்ஜ் செய்ய இலவச சார்ஜிங் மையத்தை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

முதல் கட்டமாக வாகன புகையால் திணறும் பெரு நகரங்களில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய மின் போக்குவரத்து திட்டம் (என்இஎம்எம்பி) திட்டத்தின்படி 70 லட்சம் பேட்டரி வாகனங்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் விடுவதே இதன் நோக்கமாகும்.

மாநில அரசுகள் நடத்தும் போக்குவரத்து பஸ்களில் இத்தகைய பேட்டரி பஸ்களை அறிமுகம் செய்ய வழிவகை செய்வதாகும். 

இது பெரு நகரங்களில் முதல் கட்டமாக அறிமுகப் படுத்தப்பட உள்ளது. பின்னர் இது படிப்படியாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு விரிவு படுத்தப்படும்.

தற்போது 5 லட்சம் பேட்டரி வாகனங்களே உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க 100 சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 
இவை டெல்லி, குர்காவ்ன், சென்னை, மும்பை, கொல்கத்தாவில் அமைக்கப்படும். பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ. 95 கோடி ஊக்கத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதே போல பேட்டரி இறக்குமதி வரி 26 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

பேட்டரி கார்களுக்கு 20 சதவீத சலுகை விலை அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை சலுகை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான மொத்த செலவு மதிப்பு ரூ. 14 ஆயிரம் கோடியாகும். பேட்டரி வாகனங்கள் செயல் படுவதற்கேற்ற சூழலை, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே இதன் நோக்கம்.
பேட்டரி கார்கள் உருவாவதால் கரியமிலவாயு வெளியேற்றம் 25 லட்சம் டன் அளவுக்குக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் 1.5 சதவீத அளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச் சூழலைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நிச்சயம் சிறந்த பலனைத் தரும் என்று நம்பலாம்.
Tags:
Privacy and cookie settings