தமிழகத்தில் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டு இயக்கத்தினர் ஸ்டீலமுக்கிய தலைவர்களை கொல்ல சதிதிட்டம் தீட்டி யிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்கள் பதுங்கி யிருப்பதை கடந்த பிப்ரவரி மாதவே க்யூ பிரிவு போலீஸார் உறுதி செய்து எச்சரித்தனர்.
தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்சலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45)
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சென்னை ஷெனாய் நகருக்கு வந்திருந்த போது கியூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் முகேஷ் யாதவ் என்ற சுரேந்திர யாதவ் (33) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநில மாவோயிஸ்ட்டுகள் தலைவன் விக்ரம் கவுடா தலைமையில் ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக கியு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை, நீலகிரி, உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப் பட்டுள்ளது.