படுத்துக் கொண்டு படிக்கலாமா... ஏன்?

உடல் பாகங் களுக்கு மூளைக்கும் ஓய்வு கொடுக்கும் செயல் தான் படுத்துக் கொள்வது. அப்படி நாம் படுத்திருக்கும் போது, உடலின் தசைப் பகுதிகளில் லாக்டிக் எனும் அமிலம் சுரந்து, ரத்தத்தில் கலக்கும்.
படுத்துக் கொண்டு படிக்கலாமா... ஏன்?

அதனால், ரத்தத்தில் இருக்கும் வழக்கமான ஆக்சிஜன் அளவு குறையும். இந்த நிலையில், படிக்கும் போது, உடலில் இருந்து அதிகப் படியான ரத்தத்தை மூளை எடுத்துக் கொள்ளும்.

அதில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால், சிரமப்பட்டு அந்த வேலையைச் செய்யும். அதனால் தான் படுத்துக் கொண்டு படிக்கக் கூடாது என்கிறார்கள்.

நம்மில் பலர், படுத்துக் கொண்டே நீண்ட நேரம் தொலைக் காட்சி பார்க்கிறோம். இதுகூட தவறு தான். 
 
அப்போது, கண்கள் மட்டுமல்ல, காட்சியைக் கிரகிப் பதற்காக மூளையும் ஓயாமல் வேலை செய்கிறது. அதனால், படுக்கைக்குச் சென்றதும் தொலைக் காட்சியை நிறுத்தி விடுவது ரொம்ப நல்லது.’’
Tags:
Privacy and cookie settings