தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே மின் தட்டுப்பாடு அதிகம். மின் செலவை குறைப்பதற்கேற்ற வகையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
வீடுகளில் மின்செலவை குறைப்பதற்கு குண்டு பல்பு பயன்பாட்டை தவிர்த்து ஒளிரும் விளக்குகள், குழல் விளக்குகளை பயன்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.
மின் செலவை எகிற வைப்பதில் வீட்டை கட்டும்போதே வெளிச்சம் கிடைக்கும் வகையில் கட்டுமானத்தை அமைக்காததும், தேவையில்லாத இடங்களில் மின் விளக்குகள் மற்றும் சாதனங்களை பயன்படுத்துவது தான் காரணம்.
உதாரணத்திற்கு ஒரே அறையில் மூன்று ஸ்விட்ச் பாக்ஸ் வைத்து தேவையில்லாத பயன்பாடாக இருக்கும். இதையெல்லாம் கட்டுமானத்தின் போதே கவனத்தில் வைத்து சிக்கனப்படுத்தலாம்.
ஒரு வீட்டில் எத்தனை ஸ்விட்ச் பாக்ஸ், விளக்குகள் பயன்படுத்துவது சிறந்தது என்பதையும் கட்டுமான வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஒரு கட்டிடத்தின் முகப்பு அருகில் 4 ஸ்விட்ச் தான் இருக்கவேண்டும். கட்டிடத்தின் வெளியில் ஒரு ஸ்விட்ச் பாக்சில் இரண்டு பாயின்ட்(ஸ்விட்ச்) மட்டும் இருந்தால் போதுமானது.
அதேபோல் வீட்டு முகப்பறையில் வராந்தா விளக்கை பயன்படுத்த ஒரு ஸ்விட்ச், பேன் பாயிண்ட், ஒளிரும் விளக்குக்கான ஒரு பாயின்ட் என மூன்று இருந்தால் போதும்.
அதேபோல் சமையலறையில் ஒரு 3பின் பிக் பாயின்ட் உட்பட ஒரு விளக்கு, புகையை வெளியேற்றும் விசிறி(எக்சாஸ்ட் பேன்) இருந்தால் போதுமானது. தேவைப்பட்டால் சமையலறையிலேயே மிக்சி, கிரைண்டர் போன்றவற்றுக்கு என ஒரு பாயின்ட் இருந்தால் போதுமானது.
மூன்று அறைகள் ஒரு சமையலறை கொண்ட வீட்டிற்கு 6 அல்லது 7 ஸ்விட்ச் பாக்ஸ் தான் பயன்படுத்தவேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுநர்கள்.