மாதவிலக்கு நாட்களின் போது டாம்பன் உபயோகிக்கலாமா?

சகல விஷயங் களிலும் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்ற விரும்பு கிறார்கள் இன்றைய இளம் பெண்கள். அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் டாம்பன் உபயோகிப்பது. 


மாதவிலக்கு நாட்களின் போது உபயோகிக்கிற நாப்கின் களுக்கு மாற்று இது. சானிட்டரி நாப்கினை போல இது தட்டையாக இல்லாமல், உருளை வடிவில், உறுப்பினுள் 

செருகிக் கொள்ளும்படி இருக்கும். மேலை நாடுகளில் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் சகஜம் என்பதால் அங்குள்ள பெண்கள் டாம்பன் உபயோகி க்கத் தயங்குவ தில்லை.

நம்மூரில் சமீப காலம் வரை அதிகம் புழக்கத்தில் இல்லாம லிருந்த டாம்பன், மேல் தட்டுப் பெண்கள் மத்தியில் மெதுவாகப் பரவ ஆரம்பித் திருக்கிறது.

டாம்பன் உபயோகிப் பதில் உள்ள சாதக, பாதகங்கள், உபயோகிப்ப வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எல்லா வற்றையும் விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா.

‘‘டாம்பன் என்பது பஞ்சு உருளை போன்று இருக்கும். மாத விலக்கின் போது, இதை பெண்ணு றுப்பினுள் செருகிக் கொள்ள வேண்டும். சாதாரண சானிட்டரி நாப்கின் உபயோகிக்கும் போது, 

ரத்தப் போக்கு அதிகமாகி, நாப்கின் நனைந்து விட்டால், ரத்தக் கசிவு வெளியே வரும். ஆனால், டாம்பனில் அந்தப் பிரச்னை இல்லை. வெளியேறும் ரத்தம் முழுவதையும் அது உறிஞ்சிக் கொள்ளும்.

திருமண மாகாத பெண்கள் இதை உபயோகிப்பது குறித்து நம்மூரில் ஒரு தயக்கம் நிலவுகிறது.

டாம்பன் உபயோ கித்தால் கன்னி த்தன்மை பாதிக்கப் படுமா என்பதே பலரின் கேள்வியும். டாம்பன் என்பது சின்ன சைஸ் மெழுகுவர்த்தி போன்று தான் இருக்கும். 

அதை உபயோகிப்ப தால் கன்னி சவ்வு கிழிய வாய்ப் பில்லை. தவிர, தரமான நிறுவனத் தயாரிப்பு களை உபயோகிக்கிற போது, இந்த பயம் தேவை யில்லை.

நாப்கின் உபயோகிக்கிற போது செய்ய முடியாத நீச்சல் போன்ற சில வேலைகளை, டாம்பன் உபயோகி க்கும் போது செய்ய லாம். டாம்பனை அகற்றாமல் குளிக்கலாம்.

சிறுநீர் கழிக்கலாம். எந்த அசவுகரிய மும் இருக்காது.இத்தனை நன்மைகள் இருந்தாலும், டாம்பன் உபயோகி க்கும் போது சில விஷயங் களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*பூப்பெய்திய பிறகு தான் டாம்பன் உபயோகி க்கத் தொடங்க வேண்டும்.

* மிகக் குறைவான ரத்தப் போக்கு அல்லது ரத்தத் திட்டுகளுக்கு டாம்பன் உபயோகிப் பதைத் தவிர்க்கவும். 

* உறுப்பினுள் அதை சரியாகப் பொருத்திக் கொள்ளப் பழக வேண்டும். சரியாகப் பொருத்தாத போது, நடக்கும் போதும், நிற்கும் போதும் கால்களுக்கு இடையில் ஒருவித தர்மசங்கடத்தை உணர்வார்கள்.

* நாப்கினை போல இது நனைந்து, புதிய நாப்கின் மாற்ற வேண்டிய அவசரத்தை உணர்த்துவ தில்லை என்பதால், 


பல மணி நேரத்துக்கு உள்ளே இருக்க வாய்ப் புண்டு. அது மிகவும் தவறு. குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒரு முறை டாம்பனை மாற்ற வேண்டியது அவசியம்.

* டாம்பனின் வெளிப் பக்கத்தில் ஒரு நூல் இணைக்கப் பட்டிருக்கும். அதைப் பிடித்து வெளியே இழுத்தால் டாம்பன் வெளியே வந்து விடும்.

* பல மணி நேரம் மாற்றாமல் வைத்தி ருக்கும் போது, டாம்பன் உபயோக த்தால் இன்ஃபெக்ஷன் வரலாம். அதன் விளைவாக காய்ச்சல் மற்றும் கெட்ட வெள்ளைப் போக்கு ஏற்படலாம். 

சரியான நேரத்தில் கண்டு பிடித்து சிகிச்சை அளிக்கப்படா விட்டால், அது வளர்ந்து, அசாதாரண மாகி, மற்ற தொற்றுக்களை வரவழை க்கவும் காரண மாகலாம்.

டாம்பன் என்பது சின்ன சைஸ் மெழுகு வர்த்தி போன்று தான் இருக்கும். அதை உபயோ கிப்பதால் கன்னி சவ்வு கிழிய வாய்ப் பில்லை!
Tags:
Privacy and cookie settings